சீட்டுக்கட்டு போல சரிந்த தராலி.. உத்தரகாண்ட் நிலச்சரிவில் 50 பேர் மிஸ்ஸிங்.. உச்சக்கட்ட மீட்பு பணி
சென்னை: உதராலி கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் எதிர்பாராத விதமாக சிக்கி கொண்டனர்.. திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள தராலி கிராமத்தில் இதுவரை 650 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.. நிலச்சரிவில் சிக்கியுள்ள ராணுவத்தினர் 9 பேர் உட்பட 50 நபர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன..
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில், கடந்த 5ம் தேதி, மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது...

மேலும், கீர் கங்கா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மலை உச்சியிலிருந்து சேறும், சகதியுடன் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், கட்டிடங்கள் என அனைத்துமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், தராலி கிராமத்தின் பெரும்பகுதி மண்ணில் புதைந்தது.
இந்த துயர சம்பவத்தில், அந்த நிமிடமே 5 பேர் மண்ணில் புதைந்துவிட்டனர்.. இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாயின.. 4வது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் நடந்தன.... தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினருடன் இணைந்து ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
50 பேர் மிஸ்ஸிங்
மலை சார்ந்த பகுதி என்பதால், வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை விமானம் வாயிலாக மீட்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.. ஆனால், 50-60 அடி உயரத்துக்கு இடிபாடுகள் குவிந்துள்ளதால் மாயமானவர்களை தேடும் பணி சவாலாக இருந்து வருகிறது. எனவே கனரக இயந்திரங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன..
இன்னும் 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்கிறார்கள்.. அதிலும் தராலியில் புதிய விடுதிகள் கட்டும் பண்யில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தார்களாம்.. இதனை தவிர, காட்டேஜ்கள், ஓட்டல்களிலும் ஏராளமானோர் தங்கியிருந்ததாக சொல்கிறார்கள்.. எனவே மாயமானோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் அஞ்சி சொல்கிறார்கள்.
இன்றும் தொடர்கிறது மீட்பு பணி
இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.. விமான படையின் 2 சினூக் ரக ஹெலிகாப்டர்கள், 2 எம்ஐ17 ஹெலிகாப்டர்கள், உத்தரகாண்ட் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு சொந்தமான 8 ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள், ரேடார்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
ராணுவம், இந்திய - திபெத் எல்லைக்காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, காவல்துறை என 800 மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இந்த மீட்பு பணிகளுக்காகவே, பாகீரதி நதியின் குறுக்கே ராணுவத்தினர் தற்காலிக ஆயத்த பாலத்தை அமைத்துள்ளனர்.. போர்க்கால அடிப்படையில் மீட்பு-தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.. தொலைத்தொடர்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன..
முதலமைச்சர் வேண்டுகோள்
உத்தரகாசியிலேயே மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி முகாமிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார்.. மேலும் தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், "தராலி, ஹர்சில், உத்தரகாசி இடையே சாலைபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்இணைப்புகளும் சீராகவில்லை.பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், அதிகாரிகள், மற்றும் பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications