விழுப்புரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட மாணவி.. கொடியவர்களுக்கு கடும் தண்டனை வழங்குக.. வைகோ ஆவேசம்
சென்னை: விழுப்புரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட மாணவி வழக்கில் கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் - திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பத்தாம் வகுப்புப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை - கால்களைக் கட்டிப்போட்டனர்.

பின்னர் அந்த சிறுமியின் வாயில் துணி வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்திய கொடூரச் செயல் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடூரச் செயல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications