Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகோ நடைபயணத்தை புறக்கணித்த காங்கிரஸ்.. கூட்டணிக்குள் சலசலப்பு.. என்ன மேட்டர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தை துவக்குகிறார். வைகோவின் சமத்துவ நடைபயணம் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி திடீரென புறக்கணித்துள்ளது. வைகோ நடைபயண துவக்க விழா அழைப்பிதழின் முன் அட்டையில், மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் படம் இடம்பெற்றுள்ளதால் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ சமத்துவ நடைபயணத்தை இன்று காலை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்துள்ளார். இந்த தொடக்க விழா திருச்சி தென்னூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

vaiko congress trichy

நடைபயண தொடக்க விழா நிகழ்வில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன், தி.க. வீ.குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது.

இந்த அழைப்பிதழின் முகப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோவின் நடைபயண தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை புறக்கணித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.

புலிகள் இயக்கத் தலைவரின் படம் போட்டிருக்கும் விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றால் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரான செயலாக கருதப்படும். எனவே, நடைபயண துவக்க விழாவில் செல்வப் பெருந்தகை பங்கேற்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தேசிய தலைமைக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வைகோவின் நடைபயண துவக்க விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை.

இதற்கிடையே, திமுக உடனான காங்கிரஸ் மோதல் குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடைபயண துவக்க விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்பு குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

திருச்சியில் நேற்று வைகோ அளித்த பேட்டியில், தமிழக நலனுக்காக, தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தொடுத்து, வெற்றி பெற்றுள்ளேன். ஜாதி மத மோதல், தமிழகத்தில் மீண்டும் தலைவிரித்து ஆடுவதற்குரிய சூழலை சிலர் உருவாக்குகின்றனர். அதை தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக, திருச்சியிலிருந்து நடைபயணம் துவக்குகிறேன்.

லட்சுமண ரேகையை தாண்டுகிற வழக்கம் எங்களுக்கு எப்போதும் இல்லை. எங்கள் எல்லையை தாண்டி நாங்கள் போகவில்லை, கூட்டணி தர்மம் தழைக்க, கூட்டணி தலைமையை மதித்து செயல்படும் கட்சியாக மதிமுக விளங்குகிறது. கூட்டணி கட்சிகள் மனம் புண்படும்படி எந்த கருத்தையும் சொல்ல மாட்டோம் எனத் தெரிவித்தார்.

மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் பொருளாதாரம், திமுக அரசு குறித்து, காங்கிரஸ் தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்துகளில் எந்த தரவும் இல்லை. அது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தேன். அவர் கருத்தை, செல்வப்பெருந்தகை, சசிகாந்த் செந்தில் போன்றோர் கண்டித்துள்ளனர்.

கூட்டணிக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் தர்ம சங்கடத்தை உருவாக்கும் கருத்தை, பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தேன். அரசியலைக் கடந்து, ராகுல் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் . அவருடன், எனக்கு நல்ல நட்பு உண்டு. மதிமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் விளக்கம் அளித்து விட்டேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+