நாங்க கேட்ட முதல் சங்கீதம்! கரும்பலகையில் உங்கள் சாக்பீஸ் சத்தம்! ஆசிரியர்களுக்கு வைரமுத்து புகழாரம்
சென்னை: நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவிதை நடையில் ஆசிரியர்கள் தின வாழ்த்துகளை கூறியுள்ளார். கரும்பலகையில் ஆ என எழுதப்பட்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: ஆசிரியப் பெருமக்காள்!
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம் உங்களை
எங்கள் சூரியோதயம்
உங்கள் வகுப்பில் நிகழ்ந்தது
உங்கள் சொற்களில்
இருள் உடைந்தது
எம்.ஜி.ஆரும் சிவாஜியும்
உச்சத்திலிருந்தபோது
நீங்களே எங்கள்
கதாநாயகர்கள்
நாங்கள் கேட்ட
முதல் சங்கீதம்
கரும்பலகையில் உங்கள்
'சாக்பீஸ்' சத்தம்
உங்களைக் கடக்கையில்
நெஞ்சு கடக்குமே
ஒரு மெல்லிய அச்சம்
அதுதான்
உங்கள் மதிப்பின் உச்சம்
தேர்வுத் தாளில்
எப்போதேனும் எழுதுவீர்களே
'நன்று' என்று
ஆகா!
ஒற்றைச் சொல்லில்
ஒருபுட்டி ரத்தம்

உங்கள் கிளையிற்
பழுத்த பழங்கள்
எங்கெங்கோ ஏற்றுமதியாகிப்போக
உங்கள் வேர்கள் மட்டும்
இங்கே...
ஆங்காங்கே...
ஓய்வுறுநாளில்
கல்விக் கூடத்தில் பதிந்த
உங்கள் கடைசிப் பார்வையும்
விடைபெறுநாளில்
உங்களை நாங்கள் பார்த்த
கண்ணீர்ப் பார்வையும்
வேறு வேறல்ல
ஆண்டு பல
நீண்டு வாழ்வீர்
ஐயன்மீர்
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகளில் தங்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications