Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டுக்கோட்டை, கண்ணதாசனுக்கு சீனியர்! மருதகாசி எனது வீட்டில் உயிரோடிருக்கிறார்! வைரமுத்து உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனும் தடம்பதிப்பதற்கு முன்பே திரைப்பாட்டில் இடம்பிடித்தவர் மருதகாசி என்றும் நூற்றுக்கணக்கான பாடல்களை அவர் எழுதியுள்ளார் என்றும் கவிஞர் வைரமுத்து, புகழாரம் சூட்டியுள்ளார்.

"விவசாய புலவர்" மருதகாசியின் நினைவு நாளான நவ.29ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் புலவர் குறித்து, கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

vairamuthu maruthakasi

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
கண்ணதாசனும்
தடம்பதிப்பதற்கு முன்பே
திரைப்பாட்டில் இடம்பிடித்தவர்
மருதகாசி

அந்த வேளாண் குடும்பத்து
விவசாயப் புலவனின்
நினைவு நாள் இன்று

'அலிபாபாவும் 40 திருடர்களும்'
அனைத்துப் பாடல்களும் அவர்தான்

உத்தமபுத்திரனில்
'முல்லை மலர்மேலே
மொய்க்கும் வண்டுபோலே'

மந்திரி குமாரியில்
'வாராய் நீ வாராய்'

தாய்க்குப்பின் தாரத்தில்
'மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா'

மன்னாதி மன்னனில்
'ஆடாத மனமும் உண்டோ'

கைதி கண்ணாயிரத்தில்
'கொஞ்சிக் கொஞ்சிப்பேசி
மதி மயக்கும்'

கொடுத்து வைத்தவளில்
'நான் யார் தெரியுமா?'

மக்களைப் பெற்ற மகராசியில்
'ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா?'

நினைத்ததை முடிப்பவனில்
'கண்ணை நம்பாதே'

இப்படி நூற்றுக்கணக்கான
வெற்றிப் பாடல்கள்
மருதநிலக் கவிஞர்
மருதகாசி படைத்தவை

நிலத்தில் விளைந்து
சாய்ந்திருக்கும்
நெற்கதிர்களைப் பார்த்து
'வளர்ந்துவிட்ட பருவப்பெண்போல்
உனக்கு வெட்கமா - தலை
வளஞ்சு சும்மா பாக்குறியே
தரையின் பக்கமா -இது
வளர்த்துவிட்ட தாய்க்குத்தரும்
ஆசை முத்தமா"

என்று வேளாண்மொழியில்
தற்குறிப்பேற்ற அணி எழுதியவர்

வாழும் காலத்திலேயே
அவர் சாதனைகள்
உரத்த குரல் இல்லாமல்
உலர்ந்து போனதால்
அதிவிரைவில் அவர்
மறக்கப்பட்டுவிட்டார்

நினைவூட்டுவதற்கு
இரண்டு வேண்டும்

இறந்தவன் பெருமை உணர்ந்த
குடும்பம் வேண்டும்
அல்லது
நிலைத்த ஒரு நிறுவனம் வேண்டும்

குடும்பம் என்றால்
படத்திற்கு 5பேர் பூப்போடுவார்கள்
நிறுவனம் என்றால்
50பேர் கைதட்டுவார்கள்

இந்த இரண்டும் இல்லாதவர்கள்
ஓராண்டு நினைவு திரும்புமுன்னே
நூறாண்டு மறக்கப்படுகிறார்கள்

எத்துணை பெரிய
கொம்பனுக்கும் இதுவேநேரும்

நன்றியுள்ள சமூகத்தில்தான்
கலைஞன் உயிரோடு இருக்கிறான்

மருதகாசி
எனதுவீட்டில் உயிரோடிருக்கிறார்

இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

யார் இவர்?

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருதகாசி. இவர் 1920-ஆம் ஆண்டு பிறந்தார். தனது 29 ஆவது வயது முதல் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

என்னென்ன பாடல்கள்

இவர் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி" என்ற நாடகத்திற்கு பாடல் எழுதினார். மந்திரிகுமாரி திரைப்படத்தில் மருதகாசி எழுதிய "வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே..", மங்கையர் திலகம் படத்தில் "நீல வண்ணக் கண்ணா வாடா", உள்ளிட்ட பாடல்கள் மருதகாசியை பிரபலமாக்கியது.

இறப்பு

தாய்க்குப் பின் தாரம் படத்திற்காக எம்ஜிஆருக்கு "மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா.. " என்ற பாடலை எழுதியிருந்தார். எண்ணற்ற பாடல்களால் ரசிகர்களை கட்டி போட்ட மருதகாசி, தனது 69 ஆவது வயதில், அதாவது 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி காலமானார். அவரது இறப்புக்கு பிறகு மருதகாசியின் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு அரசுடைமையாக்கியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+