நாட்படு தேறல் - வைரமுத்துவின் நாம் நடந்த தெருவில் என தொடங்கும் 5ஆம் பாடல் வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்படு தேறல் என்ற தலைப்பில் நாம் நடந்த தெருவில் என தொடங்கும் 5ஆவது பாடலை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

நாட்படு தேறல் என்ற தலைப்பில் அவர் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. இதன் முதல் பாடல் ஏப்ரல் 18 ம் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.

 Vairamuthu released 5 th song of Naatpadu Theral- 05

வாரம் ஒரு பாடல் வீதம், நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தலைப்பு பாடலுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்திருந்தார். கார்த்திகேயன் இயக்கிய இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி இருந்தார்.

நாம் நடந்த தெருவில் என தொடங்கும் 5ஆம் பாடலுக்கு இசை- குரல் ஆலாப் ராஜீ செய்திருந்தார். இதன் இயக்கம் சரண் ஆவார்.

வைரமுத்துவின் பாடல் வரிகள்:

நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்
இருள் மட்டும்

கவிதை பாடிய குயில்கள்
இறந்து போனதடி
காலம் என்னும் நதியோ
வடிந்து போனதடி
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும் காற்றில் அலையுதடி

இந்தத் தெருவில் காகம் கரைந்தால்
இசைதான்
இந்தத் தெருவில் புழுதி பறந்தால்
மணம்தான்
இந்தத் தெருவில் வேப்பங் கனியும்
தேன்தான்
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம்
நீதான்

காதல் நடந்த வீதியிலே
நடந்து பார்த்தல் கொடுமையே
தேகம் தேடி ஆடை ஒன்று
நடந்து போதல் நரகமே

ஒரு சொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி- நம்
இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி

சாயம்போன பூக்கள் பூக்கும்
மரங்கங்- நம்
கன்னம் போலக் காரை பெயர்ந்த
சுவர்கள்
திண்ணை எல்லாம் ஓடிப்போன
குடில்கள்
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும்
தடங்கள்

வீதியிருந்தும் வெறுமையாய்
ஜாதியிருந்தும் தனிமையாய்
இலக்கணத்தில் மட்டும் அல்ல
வாழ்க்கையிலும் ஒருமையாய்

ஒரு சொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி- நம்
இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி

 Vairamuthu released 5 th song of Naatpadu Theral- 05
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+