"சர்ச்சைக்கு இடமில்லை! பெண்ணுக்கும் பிழை இல்லை.." தெய்வம் தொழாஅள் குறளுக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்
சென்னை: முப்பால், தெய்வ நூல் என்று அழைக்கப்படும் திருக்குறளுக்கு இப்போது கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தெய்வம் தொழாஅள் எனத் தொடங்கும் 55வது திருக்குறளுக்கான விளக்கத்தைக் கவிஞர் வைரமுத்து அளித்திருக்கிறார்.
உலகப் பொதுமறையான திருக்குறள் 133 அதிகாரங்களுடன் மொத்தம் 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது. அது அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் இந்த இரண்டு அடிக் குறளில் வள்ளுவர் கொடுத்திருப்பார்.

பொய்யா மொழியான திருக்குறளுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுதும் பணிகளை ஆரம்பித்தார். 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பில் அவர் எழுதியுள்ள உரை நாளை மறுநாள் அதாவது ஜூலை 13ம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான வாழ்த்துரையை முனைவர்கள் இறையன்பு மற்றும் பரவீன் சுல்தானா வழங்கும் நிலையில், ஏற்புரையைக் கவிப்பேரரசு வைரமுத்து வழங்குகிறார்.
இதற்கிடையே 55வது திருக்குறளுக்குத் தனது உரை விளக்கம் குறித்து சில கருத்துகளை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
என்பதே அந்தக் குறளாகும்.
தெய்வம் தொழாஅள்
— வைரமுத்து (@Vairamuthu) July 11, 2025
கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
இந்தக் குறளுக்கு
என்ன சொல்கிறது
வள்ளுவர் மறை
வைரமுத்து உரை?#திருக்குறள் | #திருவள்ளுவர்#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை pic.twitter.com/arj9fsGhV3
இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "வள்ளுவர் படைத்த 55ஆவது குறள் காலம்காலமாகச் சர்ச்சைக்குள்ளாகி வந்துள்ளது. கடவுளைத் தொழ மாட்டாள்.. கணவரையே தொழுதிடுவாள்.. அப்படிப்பட்ட இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்துவிடும் என்பது பொருள் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்தது.
இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத் தான் ஆளாகும். அந்தச் சர்ச்சையை நான் எனது உரையில் சரி செய்திருக்கிறேன். கட்டமைக்கப்பட்ட தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவரைத் தொழும் ஒரு பெண் பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என எழுதியிருக்கிறேன். இதன் மூலம் சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழை இல்லை" என்றார்.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications