50 கார்கள் புடைசூழ.. வீட்டிலிருந்து சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட வைரமுத்து
சென்னை: பிப்ரவரி 27- ஆம் தேதி மாலைப் பொழுதை தன் ரசிகர்களுக்காக ஒரு பொன்மாலைப் பொழுதாகவே மாற்றிவிட்டார் கவிஞர் வைரமுத்து.
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுத வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது முதல் கவிதை நூலான வைகறை மேகங்கள் கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972 இல் வெளிவந்தது.

அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவர். இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களையும் எழுதியிருக்கிறார். இந்த ஆண்டும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அவரது புத்தகங்கள் இடம்பெற்றன.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வைரமுத்து நேரில் சென்றார். அங்கு தனி மேடை அமைத்து வாசகர்கள் வாங்கிய புத்தகத்தில் கையெழுத்திட்டு தந்தார்.
இதுகுறித்து வைரமுத்து வெளியிட்ட வீடியோ தொகுப்பு இதோ...
பிப்ரவரி 27- ஆம் தேதி மாலைப் பொழுதை தன் ரசிகர்களுக்காக ஒரு பொன்மாலைப் பொழுதாகவே மாற்றிவிட்டார் கவிஞர் வைரமுத்து. ஆம்! இலக்கிய உலகில் அவர் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாகவும், இளைஞர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் 50 மகிழுந்துகள் சூழ தன் பெசன்ட் நகர் இல்லத்திலிருந்து புத்தகக் காட்சி நடக்கும் திடல் வரை பயணமாக வந்தார் கவிஞர் வைரமுத்து.

புத்தகக் காட்சியில் வாசகர்கள் வாங்கிய தம்படைப்புகளில் கையொப்பமிட்டு அவர்களுடன் அளவளாவி மகிழ்ந்தார். அதன் காணொலித் தொகுப்பு இதோ உங்களுக்காக... என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பேக்கிரவுண்டில் ஓடியது. பின்னர் விழா மேடைக்கு சென்ற போது இது ஒரு பொன் மாலை பொழுது பாடல் ஒலித்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications