சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து.. தனது படைப்புகளில் கையொப்பமிட்டார்
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து, தன்னுடைய படைப்புகளை வாங்கும் வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையொப்பமிட்டு வழங்கினார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த இந்தப் புத்தகக் கண்காட்சி, கொரோனா 3 அலை காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது,
ஓமிக்ரான் பாதிப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த பிப். 16ஆம் தேதி தொடங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி, வரும் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஆர்வமுடன், புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.
இதனிடையே இன்று புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து, தன்னுடைய படைப்புகளை வாங்கும் வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையொப்பமிட்டு வழங்கினார்.

கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்கு இந்த ஆண்டு பொன் விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான வைகறை மேகங்கள் 1972இல் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது..
வைரமுத்து இதுவரை 38 புத்தகங்கள் எழுதி உள்ள நிலையில், அதில் 17 புத்தகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சிணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே வைரமுத்து இலக்கியம் 50ஐ வாசகர்களோடு கொண்டும் வகையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்த கவிஞர் வைரமுத்து, வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் உற்சாகத்துடன் கையொப்பமிட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications