"வள்ளுவர் மறை வைரமுத்து உரை"! ஜூலை 13 இல் வெளியாகிறது! பிறவி பயனை அடைந்ததாக பூரித்த கவிப்பேரரசு!
சென்னை: திருக்குறளில் உள்ள அறத்து பால், பொருட் பால், இன்பத்து பால் ஆகியவற்றிற்கு கவிப்பேரரசு வைரமுத்து உரை எழுதியுள்ள நிலையில் அது ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நூலின் பெயர் "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" என்பதாகும்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை'
அச்சுப்பணி நிறைந்துவிட்டது
எனது நாற்பதாம் நூல் இது
இதன்
முன்னுரையை நான்
முனைந்து எழுதியிருக்கிறேன்
13 பக்கங்களில் இயங்குகிறது
எனது நீண்ட முன்னுரை
வள்ளுவர்
காற்றைப்போல் பொதுவானவர்
காற்றில் யாரும்
சாயமடிக்க முடியாது;
எந்தப் பழைமை வாதமும்
காற்றைப் பூட்டிவைக்க இயலாது
மறைக்க முடியாத சான்றுகளும்
மறுக்க முடியாத தரவுகளும்
மொய்த்துக் கிடக்கின்றன
முன்னுரையில்
வள்ளுவம்
உலகப் பொதுமறை என்று
உலகத் தமிழர்கள்
உரக்கச் சொல்வதற்கு
எனது முன்னுரையே
வாளுமாகும்; கேடயமுமாகும்
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திருக்குறள் தமிழின் பெருமைமிகு இலக்கியம். இது அறம், பொருள், இன்பம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு நெறிகளை எளிய முறையில் விளக்கும் இந்த குறள்கள் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு பலர் இதை படித்து வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த திருக்குறளுக்கு கவிஞர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுத தொடங்கினார். 1330 குறள்களுக்கும் அவர் மே 22 ஆம் தேதியுடன் உரையை எழுதி முடித்துள்ளார்.
‘வள்ளுவர் மறை
— வைரமுத்து (@Vairamuthu) June 22, 2025
வைரமுத்து உரை’
அச்சுப்பணி நிறைந்துவிட்டது
எனது நாற்பதாம் நூல் இது
இதன்
முன்னுரையை நான்
முனைந்து எழுதியிருக்கிறேன்
13 பக்கங்களில் இயங்குகிறது
எனது நீண்ட முன்னுரை
வள்ளுவர்
காற்றைப்போல் பொதுவானவர்
காற்றில் யாரும்
சாயமடிக்க முடியாது;
எந்தப் பழைமை வாதமும்
காற்றைப்… pic.twitter.com/tyHtN1Vv6n
இந்த நிலையில் அந்த உரைக்கு பெயரையும் அன்றைய தினமே அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திருக்குறள் நிறைந்துவிட்டது. முப்பாலுக்கும் உரை எழுதி முடித்திருக்கிறேன். இன்று தலைப்பை அறிவிக்கப் போகிறேன்.. தருமரும், மணக்குடவரும், தாமத்தரும், நச்சரும், பரிதியும், பரிமேலழகரும், திருமலையரும், மல்லரும், பரிப்பெருமாளும், காளிங்கரும், பின்னாளில் வ.உ.சிதம்பரனாரும், தேவநேயப் பாவணரும், புலவர் குழந்தையும்
மு வரதராசனாரும், இன்னும் பல சான்றோர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், நாவலரும் எழுதி முடித்த பிறகும் கூட, திருக்குறளுக்கு இன்னும் உரை மிச்சப்பட்டிருக்கிறது. அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1333 அருங்குறளுக்கும் உரை எழுதி முடித்த உடன் நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறேன். 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டிருக்கிறேன்.
உங்கள் வாழ்த்துப் பூக்களை நான் வேண்டி நிற்கிறேன். நீங்கள் என் மீது வீசப்போகும் ஒவ்வொரு பூவும், என் உறுதியை உயர்த்திப் பிடிக்கும். இன்னும் தமிழுக்குச் செய்ய வேண்டும் என்ற வேட்கைக்கு வேகம் கொடுக்கும். வாழ்க திருவள்ளூவர்! வளர்க வள்ளுவம்! வள்ளுவர் மறை, வைரமுத்து உரை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications