திமுகவில் இணைந்த கையோடு அதிர்ச்சி! 2026-ல் வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாடு தொகுதி இல்லையாமே?
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, தற்போது திமுகவில் இணைந்துள்ள வைத்திலிங்கத்திற்கு வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் களம் காண மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைத்திலிங்கம் டெல்டா மாவட்டத்துக்காரர் என்பதால் அவரை சோழ மண்டலத்து தளபதி என அதிமுகவினர் அழைத்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அவரது அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டாவில் வலம் வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் அதிமுகவில் இரட்டை தலைமை என்ற நிலை உருவானது. அதன்படி ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர்.
இதையடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பேச்சு எழுந்த போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வைத்திலிங்கம் செயல்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் எல்லாம் நீக்கப்பட்டனர்.
அவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர். இந்த நிலையில் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ஐயப்பன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கினார்.
இரட்டை தலைமை
அதை வைத்து அதிமுகவுக்கு இரட்டை தலைமை வேண்டும் என்றும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்து வந்த வைத்திலிங்கமும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தினார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உரிமை மீட்பு குழு கூட்டத்தில் கூட டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் அதிமுக ஒன்றிணையாவிட்டால், புதிய கட்சி தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஆனால் டிசம்பர் 25 ஆம் தேதியும் வந்து இஅந்த ஆண்டே முடிவடைந்த நிலையிலும் ஓபிஎஸ் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியானது.
யாரெல்லாம் இணைந்தனர்
இதுகுறித்து ஏற்கெனவே சுதாரித்த மனோஜ் பாண்டியன், திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகரன் ஏற்கெனவே ஓபிஎஸ்ஸுடன் இருந்து விலகிய நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் வைத்திலிங்கமும் திமுகவில் இணைய முடிவு செய்தார்.
இது தவறான தகவலாக இருக்கும். அவர் ஓபிஎஸ்ஸுடன் இருந்து விலகமாட்டார் என சொல்லப்பட்டது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதெல்லாம் இந்த பேச்சு ஏற்படும். ஆனால் அது போல் ஒன்றும் நடக்காது.
கடந்த இரு மாதங்களாக வைத்திலிங்கத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பொதுவெளியில் தலை காட்டாமல் இருந்தார். இதுவும் அவர் திமுகவில் இணைவார் என்ற தகவலுக்கு வித்திட்டது.
அண்ணா அறிவாலயத்தில்
இந்த நிலையில் நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்திற்கு வைத்திலிங்கம் தனது மகன் பிரபுடன் வந்திருந்தார். அவர்கள் இருவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.
திமுக எனும் தாய் கழகம்
இந்த நிலையில் திமுகவில் அவர் இணைந்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "திமுக தான் எங்களுக்கு தாய் கழகம். ஓபிஎஸ் கூட்டணி விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தார். அதனால் திமுகவில் இணைந்தோம்" என தெரிவித்தார்.
என்ன பதவி
பொதுவாக கட்சியில் சேரும் பிரபலங்களுக்கு தேர்தல் சீட், கட்சியில் பதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்படும். ஆனால் வைத்திலிங்கத்தை பொருத்தமட்டில் அவர் வரும் தேர்தலில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதியில் போட்டியில்லை
ஆனால் அவர் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வைத்திலிங்கம், தனக்குபதிலாக தனது மகன் மூத்த மகன் பிரபுக்கு அந்த தொகுதியை ஒதுக்குமாறு தெரிவித்துள்ளாராம். இதனால் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்திற்கு பதிலாக மகன் பிரபு போட்டியிட போகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
தஞ்சை மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ வைத்திலிங்கம். இவர் நேற்று திமுகவில் இணைந்ததால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ஒரத்தநாடு தொகுதி
கடந்த 2001 ஆம் ஆம் ஆண்டு முதல் ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக வைத்திலிங்கம் இருந்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் திமுக வேட்பாளர் மா.ராமசந்திரனிடம் தோற்றார். மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார்.
19 ஆண்டுகள்
கிட்டதட்ட ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக 19 ஆண்டுகள் 9 மாதங்கள் வரை வைத்திலிங்கம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரத்தநாடு அதிமுகவின் கோட்டை என சொல்லப்பட்ட நிலையில் தற்போது வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததால் அவரது மகன் வென்று ஒரத்தநாட்டை திமுகவின் கோட்டையாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications