சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்.. கொலை குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்யணும்.. வைத்திலிங்கம்
சென்னை: அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை ஏற்போம் என ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும் பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து வழக்கை ஜூலை 11 ஆம் தேதி தள்ளி வைத்தார். இதை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனித்தனியாக கையெழுத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுக் குழுவில் முன் வைத்து அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருத வேண்டும் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சண்முகம் தாக்கல் செய்தார். அது போல் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று அவருடன் வைத்திலிங்கம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை தமிழக அரசு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பல பேர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். எங்களை வளர்த்து அரசியலில் ஆளாக்கிய எங்களது அம்மா (ஜெயலலிதா) அவர்களின் வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டனின் எண்ணம்.
Recommended Video
அதிமுக விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உயர்நீதிமன்றம் சொல்லவில்லை, உயர்நீதிமன்றம் நாளை சொல்லும் தீர்ப்பை நீங்கள் ஏற்கிறோம் என்றார் வைத்திலிங்கம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications