வள்ளியின் திருவிளையாடலில் காலியான முருகன்.. டீ மாஸ்டருக்கு ஏன் இந்த வேலை? யாரிந்த பெங்களூர் மந்த்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதல் அட்டூழியங்கள் பெருகி வருவதுடன், குடும்ப உறவுகளும் முறிந்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வதும், மனைவியை கணவன் கொல்வதும் என அட்டகாசங்கள் பெருகிவிட்டன.. இதனால் இவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் துயரமும் நடந்து வருகிறது.. வடமாநிலங்கள் போலவே தமிழகத்திலும், கள்ளக்காதல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை தந்து வருகிறது.. நேற்று ஒரே நாளில் நடந்த 2 கொலைகள் பொதுமக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ளது காவக்காரன்பட்டி.. 42 வயது முருகன் என்பவர் டீ மாஸ்டராக உள்ளார்.. மனைவி வள்ளி. 37 வயதாகிறது.. தம்பதி இருவருமே எருமப்பட்டி, கைகாட்டியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வந்தனர்.

Valli Tea master bangalore Mantra

டீக்கடை மாஸ்டர்

இதே டீக்கடையில் 25 வயது அருண்குமார் என்பவரும் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.. ஒருகட்டத்தில் வள்ளிக்கும் அருண்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுதெரிந்த கணவன் முருகன், மனைவி வள்ளியை பலமுறை கண்டித்துள்ளார்.

கணவர் தன்னை அடிக்கடி கண்டிப்பதால் ஆத்திரமடைந்த வள்ளி, டீ மாஸ்டர் அருண்குமாருடன் சேர்ந்து முருகனை கொலை செய்ய முடிவெடுத்தனர்.. இதற்காக நண்பர் சிவாவின் உதவியை பெற்றனர்.

சம்பவத்தன்று, முருகனை அழைத்து சென்று, அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர்.. போதை தலைக்கேறிய முருகன் மயங்கிவிழும்வரை, அங்கே மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தார் வள்ளி..

வள்ளியின் கள்ளக்காதல்

பிறகு, வள்ளி, அருண்குமார், சிவா மூன்று பேரும் சேர்ந்து, முருகனின் கழுத்தை நெரித்து கொன்றனர்.. இதுதொடர்பான விசாரணையை நடத்தினர். அப்போதுதான் முருகன் மது குடித்து இறக்கவில்லை, அவரது கழுத்து நெறிக்கப்பட்டு நரம்புகள் முறிந்து உயிரிழந்துள்ளதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது..

இதற்கு பிறகுதான் கள்ள ஜோடி சிக்கியது.. கள்ளக்காதலுக்கு முருகன் இடையூறாக இருந்ததால், மது வாங்கி கொடுத்து கழுத்தை நெரித்து கொன்றதை வள்ளியும் அருண்குமாரும், ஒப்புக் கொண்டனர்.. கொலை செய்த 3 பேருமே சிறையில் உள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தவரை கொலை செய்த சம்பவம் நேற்றைய தினம் மிகப்பெரிய அதிர்ச்சியை நாமக்கல்லில் ஏற்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், கள்ளக்காதலுக்கு ஒப்புக்கொள்ளாத ஒரு பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்து, பேரதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

தம்பதிக்குள் விரிசல்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி அருகே உள்ளது திருபாளையா.. இங்கு கூசித்து வரும் தம்பதி மந்திரா மண்டல் - பிஜோன்.. மந்திராவுக்கு 27 வயதாகிறது.. இவர்கள் இருவருமே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்..

இந்த தம்பதிக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவருமே, திருபாளையா பகுதியிலேயே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்..

இதே பகுதியில் வசித்து வரும் 29 வயது சுமன் என்பவர் பிஜோனின் நண்பராவார்.. பிஜோனும், சுமனும் சேர்ந்து அந்தமானுக்கு வேலைக்கு சென்றிருந்தனர்... இதில், சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்திருந்தார்.

மந்த்ரா வீட்டில் என்னாச்சு

கடந்த 5-ந்தேதி இரவு மந்திரா வீட்டுக்கு சென்ற சுமன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.. அத்துடன், மந்த்ராவின் வீட்டில் இன்னொரு ரூமுக்கு சென்ற சுமனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. .

இந்த 2 மரணங்கள் குறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் விசாரணையில் வெளிவந்துள்ளது.. அதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்த மந்திரா, சுமனிடம் பேசி பழகி வந்துள்ளார்.

கண்டிப்பாக கள்ளக்காதல் இல்லை

கடந்த 5-ந் தேதி இரவு மந்திரா வீட்டிற்குள் சென்ற சுமன் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கலாம் என்றும், இதற்கு மந்திரா சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்திருக்கலாம், பிறகு போலீசுக்கு பயந்து சுமன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால், சுமன், மந்த்ரா இருவருக்குமே கள்ளத்தொடர்பு இல்லை என்று ஹெப்பகோடி போலீசார் உறுதியாக சொல்கிறார்கள்.. எனவே, இந்த கொலை எப்படி நடந்தது? சுமன் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+