சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்து.. மாணவர்களிடையே நஞ்சை விதைக்கிறதா தமிழக அரசு.. வானதி கேள்வி
சென்னை: சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துகளை பகிருமாறு மாணவர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ள நிலையில் திமுக அரசு மாணவர்களின் மனதில் நஞ்சை கலக்கிறதா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது போல் அன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூர், கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டு முதல்வர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்.
In Tamilnadu, Govt Arts college , Thiruvarur is requesting the college students to participate and share their views on
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 13, 2023
" Opposing #Sanathan" on the occasion of Fr CM #Annadurai birth anniversary
@dmk govt is poisoning the minds of students .
Is it not against consititution?? pic.twitter.com/oTRNcZHmfv
இந்த சுற்றறிக்கையை தனது ட்விட்டரில் சுட்டிக் காட்டிய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி சனாதன எதிர்ப்பு பற்றிய ஆழ்ந்த கருத்துகளை பகிருமாறு தமிழகத்தில் திருவாரூர் அரசு கலைக் கல்லூரி சுற்றறிக்கை விடுத்துள்ளது.
திமுக அரசு மாணவர்கள் மனதில் நஞ்சை கலக்கிறதா, இது அரசியலமைப்புக்கு எதிரானது இல்லையா என வானதி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications