வண்டலூர் பூங்காவில் 70 பேருக்கு கொரோனா- ஜன. 31 வரை மூடல்.. 5 வயது சிங்கமும் உயிரிழந்ததால் பரபரப்பு
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.31 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊழியர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக வண்டலூர் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 2000 விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மொத்தம் உள்ள 350 ஊழியர்களில் 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் ஜனவரி 31 வரை பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வைரஸ் பாதிப்பு சூழலைப் பொறுத்தே பூங்காவைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வண்டலூர் பூங்காவில் இருந்த விஷ்ணு என்ற 5 வயது சிங்கம் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உணவுக்குழலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே அந்த சிங்கம் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
முன்னதாக கடந்த ஆண்டு 2ஆம் அலை சமயத்தில் சென்னை வண்டலூர் பூங்காவில் பல சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications