வண்டலூரில் விழுந்த டபுள் சர்ப்ரைஸ்.. உயிரியல் பூங்கா தித்திப்பு சேதி.. சுற்றுலா பயணிகளுக்கு ஒரே ஜாலி
சென்னை: இந்தியாவிலேயே, உயிரியல் பூங்காக்களில் மிகச்சிறந்த பூங்கா என்ற விருதை பெற்றிருக்கும், வண்டலூர் உயிரியல் பூங்கா குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. 100% டிக்கெட் முன்பதிவுகள் டிஜிட்டல் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேலும் வரவிருக்கும் பொங்கல் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வரவேற்க முழுமையாக தயாராக உள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.. இந்த அறிவிப்புகள் அனைத்துமே சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
வண்டலூர் பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவபாகும்.. கடந்த 1855ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர்.. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்திருந்தார்கள்.

அதற்கு பிறகுதான் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று மாற்றம் செய்யப்பட்டது.
வண்டலூர் பூங்கா சர்ப்ரைஸ்
இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள். எப்படியும் ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்... அதுவும் லீவு நாட்கள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.
ஆதித்யா குரங்கு குட்டி நினைவிருக்கா
அந்தவகையில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வருகை தந்திருந்தனர்..
அன்றைய தினம் பூங்காவில் உள்ள ஆதித்யா என்ற மனித குரங்கு குட்டி தனது தாய், தந்தையிடம் செய்யும் சேட்டைகளையும், அதனுடைய இருப்பிடத்தில் உள்ள ஊஞ்சலில் ஆடியபடி செய்த சேட்டைகளையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளித்தது இணையத்திலும் வீடியோவாக வெளியாகியிருந்தது.. யானைகள் ஷவரில் குளித்து மகிழும் காட்சிகளையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து பார்த்தபடி சென்றனர்..
அரையாண்டு விடுமுறை நாட்கள்
இந்நிலையில், அரையாண்டு விடுமுறை நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் சொல்லும்போது, "அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அரை ஆண்டு விடுமுறை நாட்களில் மிக அதிக பார்வையாளர் வருகை புரிந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் டிசம்பரில் மட்டும் 1.33 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வரவேற்கும் வகையில், பூங்காவில் 4 புத்தம்புதிய கழிப்பறை வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுவதும் ஆர்ஓ குடிநீர் வசதி பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கான குழந்தை பராமரிப்பு அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட இடங்களில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. காத்திருப்பு பகுதிகள் மற்றும் ஓய்வெடுக்கும் கொட்டகைகள் மற்றும் குழந்தைகள் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் ஆகியன பயன்பாட்டிற்கு ஏதுவாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா ஹேப்பி நியூஸ்
மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட சியாமோங் கிப்பன் மற்றும் புதிதாகப் பிறந்த நீர்யானைகள், இந்திய காட்டு மாடு, சதுப்பு நில மான், முள்ளம்பன்றி, அனுமன் லங்கூர், நீலகிரி லங்கூர் மற்றும் அனகொன்டா ஆகியவை பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து மகிழ்விக்கின்றன.
அது மட்டுமல்லாமல் பார்வையாளர் அனுபவத்தை வளப்படுத்தும் வகையில், 7D தியேட்டர் மீண்டும் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மாலை 4 மணிக்கு தினசரி யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான வனவிலங்கு அனுபவத்தை வழங்கும் நிகழ்வாக உள்ளது.
டிக்கெட் முன்பதிவுகள்
பார்வையாளர்கள் பூங்காவை சுலபமாக சுற்றிப்பார்க்க 25 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் நான்கு சபாரி பேருந்துகள் பூங்காவில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் டிசம்பர் மாதத்தில், 25,000க்கும் மேற்பட்டோர் பூங்காவை சுற்றிப்பார்த்தனர். மேலும் கூடுதல் பார்க்கிங் பகுதியிலிருந்து பார்வையாளர்களை அழைத்துச் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பார்வையாளர்களுக்கு சுலமான முறையில் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் டிக்கெட் வசதிகள் நீண்ட வரிசைகளைக் குறைக்க உதவியது. 100% டிக்கெட் முன்பதிவுகள் டிஜிட்டல் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வரவிருக்கும் பொங்கல் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வரவேற்க முழுமையாக தயாராக உள்ளது" என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்துமே சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications