Vande Bharat: பெங்களூர் டூ சென்னை ரூட்டில் குமரிக்கா? அதுவும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. வெளியான குட் நியூஸ்!
சென்னை: வந்தே பாரத் (Vande Bharat) ஸ்லீப்பர் ரயில் சேவையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் தமிழக பயணிகளுக்கு குஷி அளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஒரு தகவலை தெரிவித்துள்ளனர். இரண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் ரெடியாக உள்ளதாகவும் இதில் ஒரு ரயில் பெங்களூரில் இருந்து சென்னை வழியாக குமரிக்கு இயக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ரயில்வே நவீன காலத்துக்கு ஏற்ப பயணிகளுக்கு புதுப்புது அப்டேட்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வந்தே பாரத் சொகுசு ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தற்போது நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
வந்தே பாரத் ரயில்களில் முழுவதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவு என பல்வேறு வசதிகள் இருப்பதாலும், மற்ற ரயில்களை விட குறைந்த நேரத்தில் பயண இலக்கை அடைவதாலும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் நீண்ட தூரம் செல்வதால் இருக்கை வசதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனவும், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தியன் ரயில்வேயும் பயணிகளின் இந்த கோரிக்கைகளை ஏற்று படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பெங்களூரில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் சேர்ந்தவாறு உருவாக்கப்பட்டிருந்தன.
180 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை
இந்த ரயிலின் சோதனை ஓட்டம் கூட நடத்தி முடிக்கப்பட்டது. மணிக்கு 180 கிமீ வேகத்திலும் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி இருந்தது. எல்லாம் ஓகே.. பிறகு எதற்கு பயன்பாடுக்கு கொண்டு வர தாமதம் என பயணிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதமே சேவை தொடங்கப்பட இருந்த நிலையில் சில குறைபாடுகள் காரணமாக தாமதம் ஆனது.
தமிழ்நாடு பயணிகளுக்கு குட் நியூஸ்
இந்த நிலையில் தமிழ்நாட்டு பயணிகளுக்கு குட் நியூஸ் தரும் வகையில் ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி மாதம் 2 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இதில் ஒரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலானது சென்னை டூ குமரிக்கு இயக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
புத்தாண்டு பிறந்ததும்
புத்தாண்டு பிறந்ததும் அதாவது ஜனவரி 2026-இல் இரண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் நிச்சயமாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பயணிகள் மத்தியில் தற்போது வந்தே பாரத் லீப்பர் ரயில்கள் தேவை அதிகமாக இருப்பதனால் மேலும் 8 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட இருக்கிறது.
பெங்களூர் டூ குமரி வழித்தடத்தில்
இதன் பின்னர் தேவைக்கேற்ப ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி நடைபெறும். ஜனவரி மாதம் பயன்பாட்டும் வரும் இரண்டு வந்தே பாரத் ரயில்களில் ஒன்றை பெங்களூரில் இருந்து குமரிக்கு சென்னை வழியாக இயக்க ஆலோசனை நடந்து வருகிறது. என்று கூறினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications