180 கிமீ வேகம்.. சீறிப்பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர்.. ரயிலுக்குள் நடந்த மேஜிக்! மெய்சிலிர்க்க வைத்த ரயில்வே
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கிடையே பலமுறை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும் 180 கிமீ வேகத்தில் ரயிலானது இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் சென்றது. ரயிலின் பொறியியல் கட்டமைப்பின் சிறப்பை காட்டும் வகையில், இந்த முயற்சியை ரயிலே மேற்கொண்டது.
இந்தியாவில் அதி நவீன சொகுசு ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
தமிழகத்திலும் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - நாகர்கோவில், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதில் உள்ள சொகுசு வசதிகள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.
ரயில்களின் சொகுசு இருக்கைகள், முழுவதும் ஏசி வசதி, தானியங்கி கதவுகள், வைஃபை வசதி என பல வசதிகள் உள்ளன. இதனால் இந்த ரயில்களில் கட்டணம் கூட இருந்தாலும், சொகுசு வசதிகள் மற்றும் விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும் என்பதால் விரும்பி பயணிக்கிறார்கள். வந்தே பாரத் ரயில்கள் தற்போது பகல் நேர சேவையாக இயக்கப்பட்டு வருகின்றன.
சோதனை ஓட்டம் வெற்றி
எனவே, இரவு நேர சேவையாக தொலை தூரத்திற்கும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் இடையே இருந்து வருகிறது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சோதனை ஓட்டமும் முடிந்துவிட்ட சூழலில், ரயிலின் உட்பகுதிகளில் படுக்கை முனைகளில் மிகவும் ஷார்ப்பாக வடிவமைப்பு இருப்பதை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டியதாகவும், இதனால் பயணிகள் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த வடிவமைப்பை மாற்ற அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
180 கிமீ வேகத்தில் இயக்கி சாதனை
இதன் காரணமாக ஸ்லீப்பர் ரயில்கள் சேவை தொடங்குவது தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் இரண்டாவது ரேக்கின் சோதனை ஓட்டம் இன்று ராஜஸ்தானின் கோட்டா பிராந்தியத்தில் நடைபெற்றது. இதில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், தனது அதிவேக சோதனையில் மணிக்கு 180 கி.மீ வேகத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.
சவாய் மாதோபூர் - கோட்டா - நாக்டா வழித்தடத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிவேக வழித்தடங்களில் முழு அளவில் செயல்பட இந்த ரயில் தயாராக உள்ளது என்பதை இச்சோதனை நிரூபிக்கிறது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வசதிகள்
இது இந்தியாவின் ரயில் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட ரயிலில் 16 பெட்டிகள் இருந்தன. இதில் 11 ஏசி மூன்றடுக்கு, 4 ஏசி இரடுக்கு மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டி அடங்கும். மொத்தம் 823 படுக்கை வசதிகள் உள்ளன. மூன்றடுக்கு பெட்டிகளில் 611, இரடுக்கு பெட்டிகளில் 188 மற்றும் முதல் வகுப்பில் 24 படுக்கைகள் உள்ளன.
ராஜ்தானி ரயில்களுக்கு மாற்றாக, இது வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. ஒவ்வொரு படுக்கையிலும் ரீடிங் விளக்குகள் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் உள்ளன. பயணிகளுக்கு தகவல்களை வழங்கும் அமைப்புகள், டிஜிட்டல் டிஸ்ப்ளே பலகைகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. சத்தம் குறைக்கும் பொருட்கள், மென்மையான விளக்குகள் மற்றும் மேம்பட்ட வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவை உள்ளன.
ஒரு சொட்டு தண்ணீர் கூட
முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் வெந்நீர் குளியல், விசாலமான படுக்கைகள் மற்றும் ஆடம்பரமான உட்புறங்கள் போன்ற வசதிகளுடன் இரவு நேர பயணத்திற்கு ஏற்ற வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 180 கி.மீ வடிவமைப்பு வேகம் மற்றும் 160 கி.மீ வேகத்தில் இயக்கும் திறனுடன் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஓட்டத்தின் போது ரயிலின் அதிர்வுகள் இன்றி இயங்குவதை காட்டும் விதமாக, கண்ணாடி கிளாஸில் முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் சென்றது. ரயிலின் பொறியியல் கட்டமைப்பின் சிறப்பை காட்டும் வகையில், இந்த முயற்சியை ரயிலே மேற்கொண்டது. வந்தே பாரத் ரயில் 180 கி மீட்டர் வேகத்தில் சென்றாலும் பயணிகள் எந்த ஒரு வித்தியாசத்தையும் உணராமல் சொகுசாக பயணிக்க முடியும் என்று தெரிகிறது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications