வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடத்திற்கு முன் டிக்கெட் புக் செய்வது எப்படி? எந்தெந்த ரூட்களில் அனுமதி! லிஸ்ட்
சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் (Vande Bharat train) கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பயணிகள் தாங்கள் புறப்படும் நிலையத்திலிருந்து ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது எந்தெந்த வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும், எப்படி செய்வது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் உள்ள நவீன வசதிகள் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால், பலரும் இந்த ரயில்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். தமிழகத்திலும் சென்னை - நாகர்கோவில், சென்னை - நெல்லை, சென்னை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்
தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பயணிகள் தாங்கள் புறப்படும் நிலையத்திலிருந்து ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இது, அவசர பயணங்கள் அல்லது திட்டமிடப்படாத தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்காக பயணிகள் முன்பதிவு அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், காலியான இருக்கைகள் நிகழ் நேரத்தில் தெரியும். பயணிகள் ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு முன் வரை முன்பதிவு செய்யலாம். அதாவது கரண்ட் புக்கிங் ஆப்ஷனை பயன்படுத்தி இந்த ரயில்களில் கடைசி 15 நிமிடம் வரை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். முன்னதாக, ரயில் புறப்பட்டதும் இடைப்பட்ட நிலையங்களிலிருந்து முன்பதிவு செய்ய முடியாது. இதனால் டிக்கெட்டுகள் காலியாக இருந்தும் பயணிகளுக்கு புக் செய்ய முடியாத நிலை இருந்த நிலையில், இந்த வசதி மூலம் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
8 வந்தே பாரத் ரயில்கள் என்னென்ன?
தற்போது, தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்கும் 8 வந்தே பாரத் ரயில்களில் இந்த வசதி கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் செயல்படுகின்றன. கடைசி நிமிட முன்பதிவு வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
* வண்டி எண் - 20631 மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல்,
* வண்டி எண் - 20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல்,
* வண்டி எண் - 20627 சென்னை எழும்பூர் - நாகர்கோவில், 20628 நாகர்கோவில் - சென்னை எழும்பூர்,
* வண்டி எண் - 20642 கோயம்புத்தூர் - பெங்களூரு கான்ட்.,
* வண்டி எண் -20646 மங்களூர் சென்ட்ரல் - மடகாவ்,
* வண்டி எண் - 20671 மதுரை - பெங்களூர் கான்ட்.,
* வண்டி எண் - 20677 டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - விஜயவாடா. இந்த ரயில்கள் தெற்கு மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications