இருக்கிற அக்கப்போரில் இது தேவையா.. "கஞ்சா"வை கையில் எடுத்த வனிதா.. வெகுண்டெழுந்த சூரியா தேவி!
நடிகை வனிதா மீது சூர்யாதேவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்
சென்னை: கொரோனாவுக்கு நடுவிலும்.. வனிதா பிரச்சனை பெரும் பிரச்சனையாக போய் கொண்டிருக்கிறது.. இவர் மீது சூரியாதேவி என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வனிதா பிரச்சனை 15 நாட்களாகியும் ஆறவில்லை.. அடங்கவில்லை.. பீட்டர் பால் என்பரை 3வது கல்யாணம் செய்து கொண்டார்.. என்னைக்கு சர்ச்சில் கல்யாணம் நடந்த நாளில் இருந்தே, சோஷியல் மீடியா பரபரப்பாகிவிட்டது.
கல்யாண நிகழ்ச்சியை யூ-டியூபில் பதிவு செய்தார். ஏகப்பட்ட பேர் ஆதரவு தெரிவித்தனர்.. பலர் கண்டனம் தெரிவித்தனர்.. இதையொட்டி நடந்த விமர்சனங்களால் கருத்து மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன.

ஆதரவு
ஒருசாரார் வனிதா கல்யாணம் சொந்த விஷயம் என்கிறார்கள்.. ஒருசாரார் பீட்டர் பால் மனைவி இதில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவருக்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.. அப்படி ஆதரவு தந்தவர்தான் சூர்யாதேவி என்பவர். இவருக்கு 27 வயதாகிறது. சாலிகிராமம் தசரதபுரம் சண்முக சுந்தரம் தெருவை சேர்ந்தவர் இந்த சூர்யா தேவி.

சூர்யாதேவி
சில தினங்களுக்கு முன்பு வனிதாவை எதிர்த்து யூ-டியூபில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்... அதில் அசிங்க அசிங்கமாக வனிதாவை திட்டியதாகவும் கூறப்படுகிறது.. இதனால் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்து நடிகை வனிதா, அந்த வீடியோவை பதிவு செய்த சூர்யா தேவி மீது போரூர் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்று கூறியிருந்தார்.

பரபரப்பு புகார்
இதை பார்த்து கொதித்து போன சூர்யா தேவி, வடபழனி ஸ்டேஷனில் வனிதா மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், "நான் வாடகை வீட்டில் கணவர், மகன், மகளுடன் வசித்து வருகிறேன்... நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை கல்யாணம் செய்து கொண்டது பற்றி யூ-டியூபில் வீடியோ வெளியிட்டதால் என் மீது காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார்.

நடவடிக்கை
நான் ஒரு கஞ்சா வியாபாரி என்று சொல்லி, என் மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.. இது எனக்கு மனம் புண்படும்படியாக உள்ளது... அதனால் வனிதா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்கப்போர்
தமிழ்நாட்டில் இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, வனிதா கல்யாணத்தை ஒரு விஷயமாக எடுத்து வைத்து கொண்டு சிலர் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது.. இதை சிலர் பரபரப்பு செய்து, காசு பார்ப்பதும் அதைவிட வேதனையாக இருக்கிறது.. தொற்று பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை பற்றியும், சாத்தான்குளத்தில் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு வருவது பற்றியும், லாக்டவுனில் யார் கையிலும் காசு இல்லையே என்பதையும் இவர்களுக்கு எந்த கவலையும் இல்லாதது அதைவிட கொடுமையாக இருக்கிறது!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications