அன்று வாணியம்பாடியில் பேருந்து பின்னால் ஓடினாரே மாணவி சுஹாசினி! பிளஸ் 2 தேர்வில் என்ன மதிப்பெண்?
வாணியம்பாடி: வாணியம்பாடி கொத்தக்கோட்டையில் இயற்பியல் தேர்வன்று ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய மாணவி சுஹாசினி எவ்வளவு மதிப்பெண்களை பெற்றுள்ளார் தெரியுமா? உழைப்பு உயர்வை தரும் என்பதற்கு சுஹாசினியும் சிறந்த உதாரணம் ஆவார்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் "TN HSE +2 Result 2025" அல்லது "TN SSLC Result 2025" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் வெளியாகும்.
அரசு பள்ளிகள் எத்தனை சதவீதம்
தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள்
7,92,494 பேர் தேர்வு எழுதிய நிலையில் அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,19,316. மாணவர்களின் எண்ணிக்கை 3,73,178 ஆகும். அது போல் 4,05,472 மாணவிகளும் 3,47,670 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வுக்கு10,049 பேர் வரவில்லை. அரசு பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்களில் அரியலூர் (98.32%), ஈரோடு (96.88%), திருப்பூர் (95.64%), கன்னியாகுமரி (95.06%), கடலூர் (94.99%) ஆகும்.
5 மாவட்டங்கள்
அதிகம் தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்களாக அரியலூர் (98.82%), ஈரோடு (97.98%), திருப்பூர் (97.53%), கோவை (97.4%), கன்னியாகுமரி (97.01%) ஆகும். பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்லனர்.
சிறைவாசிகள் தேர்வு
அது போல் பிளஸ் 2 தேர்வு எழுதிய 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் வாணியம்பாடியில் ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய மாணவி சுஹாசினி 437
மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
வாணியம்பாடி மாணவி சுஹாசினி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தக்கொட்டை கிராமம் உள்ளது. இங்கு கடந்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி இயற்பியல் தேர்வு எழுதுவதற்காக பேருந்து நிறுத்தத்தில் மாணவி ஒருவர் காத்திருந்தார்.
பேருந்து நிற்கவில்லை
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து நிற்கவில்லை. மாணவி சீருடையில் இருப்பதை கவனித்தும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார். அடுத்த பஸ்ஸுக்கு காத்திருந்தால் தேர்வுக்கு லேட்டாகிவிடும் என்பதால் அந்த மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினார்.
இந்த காட்சிகளை பைக்கில் பின்னால் வந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து ஓட்டுநர் முனிராஜ் போக்குவரத்து துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நடத்துவர் அசோக்குமார் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தவர் என்பதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?











Click it and Unblock the Notifications