ரஜினிக்கு பிஎம்டபிள்யூவா? சகிச்சிகிட்டு படம் பார்த்தவர்களுக்கும் தங்க காசு கொடுங்க.. வன்னியரசு கலாய்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு அளித்திருந்தனர். இது 30 நாட்களை கடந்த திரையரங்குகளில் ஓடுகிறது. மேலும் இதன் உரிமை ஓடிடிக்கு கொடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 500 கோடியை தாண்டியுள்ளது என சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை அடுத்து ரஜினிகாந்திற்கு பிஎம்டபிள்யூ காரையும், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு போர்ஸ் ரக கார்களையும் கலாநிதி மாறன் பரிசாக அளித்தார். இந்த திரைப்படத்தை அண்மையில் பார்த்ததாகவும் அது குறித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் இந்த திரைப்படம் குறித்து சில கருத்துகளை வன்னியரசு பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த #ஜெயிலர் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் காண நேர்ந்தது. இப்படம் வெற்றி வெற்றி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து கதாநாயகன், இயக்குனர், இசை அமைப்பாளர் என மூன்று பேருக்கும் விலை உயர்ந்த காரை பரிசளித்தது.
இப்போது திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்க காசு பரிசு அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு உண்மையிலேயே நேர்மை இருந்தால், சகிப்புத்தன்மையோடும் பொறுமையோடும்
ஜெயிலர் திரைப்படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் தங்க காசு போன்ற ஏதாவது பரிசு அறிவித்திருக்க வேண்டும்.
எந்த வகையிலும் சுரண்டல் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications