பேரறிவாளன் விடுதலை.. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. உச்சநீதிமன்றம் உறுதி.. வன்னியரசு
சென்னை: பேரறிவாளன் விடுதலை மூலம் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
Recommended Video
1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் 7 பேரும் சிறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்கள். எனினும் ஆயுள் தண்டனை முடிந்தும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

முன்னாள் முதல்வர்கள்
இதற்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை நேரில் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் 31 ஆண்டுகளாக சட்ட போராட்டத்தை நடத்தினார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பேரறிவாளன் தனது விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உடல்நிலை
இதனிடையே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டது. இதுவரை 5 முறைக்கு மேல் அவருக்கான பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே 7 பேரையும் விடுதலை செய்வது என்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பியும் அவை கிடப்பில் போடப்பட்டது.

பேரறிவாளன்
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் கடந்த 11 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப் பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக ஆளுநர் செய்துவிட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பேரறிவாளன் விடுதலை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில் சட்டவிதி எண் 142 இன் படி பேரறிவாளன் விடுதலைச் செய்யப்பட்டார்.

வன்னியரசு கருத்து
இதுகுறித்து வன்னியரசு தனது ட்வீட்டில் அவர் கூறுகையில் பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில அரசின் முடிவே இறுதியானது என்றும் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. இனியாவது, ஆளுநர் தனக்கு தனித்த அதிகாரம் இருக்கிறது எனும் ஆணவத்தை கைவிட்டு, மாநில அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என வன்னியரசு தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications