'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ .. விஜய்க்கு விசிக வரவேற்பு.. ஆதவ் அர்ஜூனா அதிரடி பதிவு
சென்னை: 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய் அவருக்கு வாழ்த்துகள் என விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலை குறிவைத்து களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்த மாநாட்டில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், பாரதிய ஜனதா கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் நேரடியாக கடுமையாக தாக்கி பேசினார். அதிலும் குறிப்பாக சொல்வது என்றால் பாஜக கொள்கை எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் பேசினார். இன்றைய பேச்சில் திமுக செய்து வரும் அரசியல்களை விமர்சித்த விஜய், திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே இதுவரை செய்யாத ஒன்றை முன்னெடுக்க போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதாவது தனி மெஜாரிட்டி கிடைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று கூறினார். இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து சந்திக்க போவதை வெளிப்படையாக விஜய் அறிவித்துள்ளார். விஜய்யின் இந்த அறிவிப்பை தான், திமுக, அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இப்போது விஜய் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணியில் உள்ள விசிக வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள். துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள்.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்." என்று கூறியுள்ளார்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications