ஆட்சியில் பங்கு.. காங்கிரஸ் நிலைப்பாட்டில் என்ன கருத்து? உடைத்து பேசிய திருமாவளவன்!
சென்னை: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது. இதற்கு முதலமைச்சரே நேரடியாக 'நோ' சொல்லிவிட்டார். இருப்பினும், காங்கிரஸ் தனது பிடிவாதத்தை தளத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தைகயோ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கார்கேவோ ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாக எங்கும் கேட்கவில்லை. ஆனால், இரண்டாம் கட்ட தலைவர் பொறுப்பில் உள்ள எம்பி மாணிக்கம் தாகூர் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை தீவிரமாக எழுப்பி வருகின்றனர்.

பங்கு யார் கேட்பது?
கடந்த தேர்தல் வரை இந்த கோரிக்கை எழவில்லை. ஆனால், இந்த தேர்தலில் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்துதான் கதர் தலைவர்கள் இந்த கோரிக்கையை திமுகவிடம் முன்வைத்து வருகிறார்கள்.
மாணிக்கம் தாகூர்
ஒரு கட்டத்தில் இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு ஆட்சியில் பங்கு என்பது செட் ஆகாது, மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்றும் வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால், மாணிக்கம் தாகூர் இந்த விஷயத்தை விடவில்லை. "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006யில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு" என்று கூறியிருந்தார்.
மைனாரிட்டி திமுக ஆட்சி
மாணிக்கம் தாகூர் குறிப்பிட்ட 2006 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக 163 இடங்களில் வெற்றிபெற்றாலும் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. திமுக 96 தொகுதிகளிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தயவோடு ஆட்சியில் பங்கு கொடுக்காமல் திமுக ஆட்சியமைத்தது.
2006-2011 ஆட்சிக்காலத்தை மைனாரிட்டி திமுக ஆட்சி என தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்து வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருந்தார் மாணிக்கம் தாகூர்.
தோற்ற இடங்களை தான் கேட்கிறோம்
இதனையடுத்து நேற்று "2021ம் ஆண்டு 173ல் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று ட்வீட் செய்திருந்தார். இது குறித்த திமுக தலைவர்களிடம் கேள்விகள் முன்வைக்கபட்டன. "கார்கே, ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை தவிர நாங்கள் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டோம்" என்று கட் அன்ட் ரைட்டாக பதில் அளித்திருந்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
இப்படி இருக்கையில், காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து தனது கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
திருமாவளவன் பேசியது என்ன?
அவர் கூறியதாவது, "காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்ல ஏதும் இல்லை. கூட்டணி பிரிந்துவிடக்கூடாது என்கிற ஒற்றை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் இடைவெளி, முரண்பாடு இருந்தாலும் அது பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். கூட்டணியை பாதிக்கும் வகையில் எந்த முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம்.
அதேபோல தேர்தலில் நாங்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தையின்போது இறுதி செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம்












Click it and Unblock the Notifications