"அரசியல்வாதிகளை கேள்வி கேட்கவே பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள்" அண்ணாமலைக்கு திருமாவளவன் அட்வைஸ்!
சென்னை: அரசியல்வாதிகளை கேள்வி கேட்பதற்காக தான் பத்திரிகையாளர்கள் இருக்கிறார் என்று அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுரை கூறியுள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ தமிழக பாஜக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கோபமடைந்து, தரக்குறைவான வார்த்தைகளால் அமைச்சரையும், பத்திரிகையாளர்களையும் திட்டினார்.

அண்ணாமலை பேசியது என்ன?
பத்திரிகையாளர்களின் கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்க என்று செய்தியாளர்களையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

திமுக கண்டனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சிற்கு திமுக, கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலையின் பேச்சு அநாகரீகமானது என்றும், தனது செயலுக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இனியாவது நாகரிகமும், பண்பாடும் காத்திட வேண்டும் என்று திமுகவின் டிகேஏஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் கருத்து
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஊடகவியலாளர்களை காயப்படுத்தும் வகையில் பேசி இருப்பது வேதனை அளிக்கிறது. அதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு அறிவுரை
ஊடகவியலாளர்கள் நம்மை கேள்வி கேட்க தான் இருக்கிறார்கள். ஆத்திரமூட்டும் கேள்விகளையும் கேட்பார்கள். அதற்காக ஊடகவியலாளர்களை காயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அதனால் ஊடகவியலாளர்களின் உணர்வுகளை மதித்து வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி












Click it and Unblock the Notifications