வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதம்.. சென்னையில் விசிகவினர் போராட்டம்.. போலீஸாருடன் தள்ளுமுள்ளு!
Recommended Video
சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தியதை கண்டித்து சென்னையில் அண்ணாசாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நேற்றைய தினம் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு பெரிய கலவரமும் வெடித்தது. சாலை விபத்தால் ஏற்பட்ட சண்டை ஜாதி கலவரமாக மாறியது.

அந்த பகுதியை சேர்ந்த இரண்டு தரப்பினரும் சண்டை போட்டனர். மேலும் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தி சண்டையிட்டு கொண்டனர். இதில் ஒரு பிரிவினர் அங்கிருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை உடைப்பிற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவையில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அங்கு போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
-
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications