குலுங்கியது சென்னை.. ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் கேட்டு விசிக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் இன்று 9ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் அறிவித்திருந்தார்.. தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வேண்டுகோள் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இதனை வலியுறுத்தியே இன்றைய தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, 4 நாட்களுக்கு முன்பு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நெல்லை கவின்
அப்போது, "நெல்லையில் கவின் மிகக்கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம். சம்பவ இடத்தில் அவர்கள் உடன் இருந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
கவினின் பெற்றோரும் இந்த சந்தேகத்தை முன்வைக்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றி இருந்தாலும்கூட சிறப்புப் புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற கண்காணிப்பில் புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாஜக - மதவாத அமைப்புகள்
பாரதிய ஜனதா கட்சி இங்குள்ள சில அரசியல் கட்சிகளோடும் சாதிய மதவாத அமைப்புகளோடும் இணைந்து செயல்பட தொடங்கிய பிறகு தான் சாமியின் பெயரால் வன்முறை அதிகரித்துள்ளது. ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் பல பகுதிகள் மற்றும் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் வலியுறுத்தி வருகிறோம். பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியும், உள்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதியிருக்கிறோம்.
தேசிய அளவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கின்ற இந்த கொடூரமான படுகொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் பரவலாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு பொருட்படுத்தவில்லை.
நெறிமுறைகள்
சுப்ரீம்கோர்ட் ஒரு வழக்கில் இதுபோன்ற கொலைகளை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்துள்ளது. சட்டபேரவையில் அதனை நிறைவேற்றும் வகையில் அதற்குரிய விதிகளை பயன்படுத்த வேண்டும். அதில் காவல்துறையினருக்கு வழிகாட்டுதலை வழங்கி சில நெறிமுறைகளை வரையறுத்துள்ளது.
2018ல் அந்தத் தீர்ப்பையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினரும் நடைமுறைபடுத்துவதில்லை என்பது வேதனை அளிக்கிறது.
இந்த சூழலில் இச்சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கும் பொறுப்பு, அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் இது குறித்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கும் பொறுப்பு, அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் இது குறித்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சட்டம் இயற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள
சென்னையில் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். இதை வலியுறுத்தி வருகிற 9, 11 ஆகிய தேதிகளில் தமிழக தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். கிங்டம் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக கூறுகிறார்கள். இதுவரை நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன்.
பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லும் நடைபெறுவதாக தெரிகிறது. குறிப்பாக பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, வெளி மாநிலங்கள் உள்ளவர்களுக்கு பீகார் மாநிலத்தில் வாக்காளர்களாக சேர்த்து அவர்களை வாக்களிக்க செய்வது கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்திருக்கிறார்கள்.
பாஜக மீது குற்றச்சாட்டு
அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்தியா கூட்டணி உள்ள கட்சிகள் யாவும் கூறி உள்ளது. இதனை பாராளுமன்றத்தில் குறிப்பாக விவாதிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.
ஜூலை 21-ந் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. ஜூலை 21-ந் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுபற்றி விவாதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தும் ஆளும்கட்சி அதை ஏற்க மறுக்கிறது. அந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகிறோம்.
அவர்கள் அதனை ஏன் விவாதிக்க தயங்குகின்றனர். தமிழகத்திலும் அதுபோன்று செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
அந்தவகையில், ஆணவக் கொலைகளை கண்டித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. மற்ற மாவட்டங்களில் நிர்வாகிகள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..












Click it and Unblock the Notifications