ஆளுநர் ரவி மீது கேஸ் போடனும்.. இதான் குண்டுவெடிப்பா? குறும்படம் போட்ட போலீசிடம் வன்னியரசு கோரிக்கை
சென்னை: ராஜ்பவன் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடியோ வெளியான நிலையில் அதனை பதிவிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு அளுநர் மாளிகை வெளியே கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடியை கைது செய்து போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபற்றி ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மற்றொரு பதிவில், "ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. வசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது." என்று ஆளுநர் மாளிகை குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் கருக்கா வினோத் நடந்து வந்து ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச வந்தபோது போலீசார் அதை தடுக்கும் வீடியோவை தமிழ்நாடு போலீஸ் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள வன்னியரசு, "இது தான் குண்டு வெடிப்பா? இதற்கு இத்தனை அவதூறுகளா? "எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு" எனும் பாடல் தான் ஆளுனராக பணி செய்ய வந்துள்ள திரு.ரவிக்கு பொருந்தும்.
இத்தனை வீடியோ ஆதாரம் இருந்தும் பொய்யாக பரப்புரை செய்வது ஆளுனருக்கு அழகா? காவல்துறை மிகச்சிறப்பாக பணி செய்துள்ளதை பாராட்ட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டு மூலம் வழக்கை திசை திருப்பும் தகுதியற்ற ஆளுனர் ரவி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு முன் வன்னியரசு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சட்டம் - ஒழுங்கை மதிக்காமல் பொது அமைதியை சீர்குலைத்து வரும் சமூக விரோதியை எப்படி ரவுடி என அழைக்கிறோமோ, அதே போல தான் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஆளுனர் போன்றோரை ரவுடி என அழைப்பதா? தேச விரோதி என அழைப்பதா?என்பதை ஆளுனர் மாளிகையே முடிவு செய்ய வேண்டும். இச்சூழலில், கருக்கா வினோத் எனும் ரவுடி ஆளுனர் மாளிகை மீது வெடிகுண்டு வீசியதாக காவல்துறை கைது செய்துள்ளது. இதே ரவுடி கடந்த 2022 பிப்ரவரி 10 அன்று பாஜக தலைமை அலுவலக வாசலில் வெடிகுண்டு வீசியதாக கைது செய்யப்பட்டான்.
இது தான் குண்டு வெடிப்பா?
— வன்னி அரசு (@VanniKural) October 27, 2023
இதற்கு இத்தனை அவதூறுகளா?
“எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய அறிவிருக்கு”
எனும் பாடல் தான் ஆளுனராக பணி செய்ய வந்துள்ள திரு.ரவிக்கு பொருந்தும்.
இத்தனை வீடியோ ஆதாரம் இருந்தும் பொய்யாக பரப்புரை செய்வது ஆளுனருக்கு அழகா?
காவல்துறை மிகச்சிறப்பாக பணி… pic.twitter.com/EJoHx8sWMV
இப்போது ஆளுனர் மாளிகை மீது வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளான். சமீப காலமாக,பாஜகவினரும் ஆளுனரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில்,செயல்பட்டுவருவதை கவனிக்கலாம். அதன் தொடர்ச்சியாக சட்டம் - ஒழுங்கு சரியில்லை என உறுதி செய்வதற்காக இம்மாதிரியான ரவுடிகளை பயன்படுத்துகிறார்களோ எனும் அய்யம் பொது மக்களிடையே எழுகிறது.இதன் மூலம் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னையை பாதுகாப்பான நகரமாக ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியை கலைக்க அச்சுறுத்துகிறார்களா எனும் சந்தேகமும் எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறை இந்த கோணத்திலும் விசாரணையை மேற்கோள்ள வேண்டும். இந்த வெடிகுண்டு வழக்கில் ஆளுனராக பணி செய்ய வந்துள்ள திரு.ஆர்.என்.ரவியையும் விசாரணை செய்தால் தான் விசாரணை முழுமை பெறும்." என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில், "1995 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் வீட்டுச்சுவர் அருகே வெடிகுண்டு வெடித்தது.இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக இயக்குனர் மணிரத்னம் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வெடிகுண்டு வீசிய சமூக விரோதிகளுக்கும் மணிரத்தினத்துக்கும் என்ன தொடர்பு? என்ன தனிப்பட்ட..." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications