Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழக்கறிஞர் அப்பாஸுக்கு ஜாமீன்..பாஜகவின் கூலிப்படை என்ஐஏ! எதிரிகளை வேட்டையாடுது - வன்னியரசு காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யுஏபிஏ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் முகமது அப்பாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ள நிலையில், பாஜகவை எதிர்ப்பவர்களை என்.ஐ.ஏ. வேட்டையாடி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளதாவது, "NIA அமைப்பால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் முகமது அப்பாசுக்கு பிணை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எதிராக என்.ஐ.ஏ. பதிவு செய்த வழக்கில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் தோழர் முகமது அப்பாஸ் அவர்களுக்கு பிணை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இன்று உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

VCK Vanniyarasu NIA is targeting opponent parties of BJP

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர்கள் 13 பேர் மற்றும் அடையாளம் தெரியாத மற்றவர்களுக்கு எதிராக செப். 19 ஆம் தேதி வழக்கு (RC-42/2022/NIA/DLI) ஒன்றை பதிவு செய்தது என்.ஐ.ஏ. இது போல நாடெங்கும் அந்தந்த மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த பின்னணியில் 2022 செப். 28ஆம் தேதி PFI அமைப்பை தடை செய்தது மோடி அரசு. தங்கள் அமைப்பை கலைப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பும் அதே நாளில் அறிவித்தது. தமிழ்நாடு கூட்டு சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் டிசம்பர் 2022 வரை 10 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை 2023 மார்ச் 17ஆம் தேதி தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.

இந்த நிலையில் தான் மே 5 ஆம் தேதி மதுரை வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசப் உள்ளிட்ட மேலும் 5 பேரை இந்த வழக்கில் இணைத்து கைது செய்தது என்.ஐ.ஏ. எந்த வழக்குக்காக கைதான பாப்புலர் ஃப்ரண்ட் தோழர்களுக்கு முகமது யூசப் வாதாடினாரோ அதே வழக்கில் அவரையும் இணைத்து கைது செய்தது என்.ஐ.ஏ.

VCK Vanniyarasu NIA is targeting opponent parties of BJP

இந்த வழக்கில் தான் இன்று உச்சநீதிமன்றம் பிணையை உறுதி செய்துள்ளது. அரசியல் ரீதியாக பாஜகவின் செயல் திட்டங்களை எதிர்க்கும் சனநாயக அமைப்புகளை வேட்டையாடுவதையே தமது பணியாக கொண்டுள்ளது என்.ஐ.ஏ. அமைப்பு. பீமா கோரேகான் வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு தலித்கள் உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை UAPA சட்டத்தில் கைது செய்தது NIA.

இதுவரை அந்த வழக்கில் குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை என்பது தான் NIA அமைப்பின் சாதனை. PFI அமைப்பு தடை செய்யப்பட்டது கூட அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையே/சனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய NIA போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகள் பாஜகவின் கூலிப்படையாக செயல்படுவது தான்
சனநாயகத்தின் சோகம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+