விசிக 'எக்ஸ்' கணக்கு முடக்கம்? விஜய்-க்கு ஆதரவு குறித்த முக்கிய முடிவு எடுக்கும் முன் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பில் உள்ள நிலையில், நேற்று மாலை விஜய் முதல்வராவது நிச்சயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நடந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் தவெக-விற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதை தொடர்ந்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் காமராஜ் தவெக-விற்கு ஆதரவு அளித்தாக வெளியான செய்தியும், தினகரன் குதிரை பேரம் நடக்கிறது என குற்றச்சாட்டு முன்வைத்தது மூலம் மொத்த கதையும் மாறியுள்ளது.

இந்த நிலையில் தவெக கட்சியின் ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று விஜய்-க்கு ஆதரவு அளிக்கப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கும் வேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கம் வெள்ளிக்கிழமை (மே 8) முடக்கப்பட்டது. இதற்கு 2 காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.

VCK TVK Vijay politics VCK X account suspended VCK Twitter blocked after TVK support post Thirumavalavan high level meeting today VCK decision on TVK government Tamilaga Vettri Kazhagam majority support Vijay TVK 108 seats VCK 2 MLAs key role Tamil Nadu government formation latest VCK official handle suspended May 8 Route team blocks VCK account rumor CPI CPM Congress support to TVK Viduthalai Chiruthaigal Katchi TVK alliance Tamil Nadu assembly politics update VCK support letter to Governor Thirumavalavan TVK meeting 108 2

விஜய்க்கு ஆதரவான பதிவு

'எக்ஸ்' தளத்தின் விதிகளை மீறியதாகக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம், தவெக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு பதிவைத் தொடர்ந்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் பரபரப்பு

விசிகவின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசிக கட்சி, தவெக கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை என முடிவு செய்யப்பட்டதின் மூலம், @VCKofficial_TN பக்கத்தை, விஜய்யின் சமூக ஊடகப் பிரிவான 'Route' மூலம் பிளாக் செய்யப்பட்டதாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன. இந்தச் சம்பவங்கள் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

விசிக-தவெக உறவில் முக்கிய திருப்பம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களுடன் ஆதரவு அளித்தது. இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளும் நேற்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், விசிகவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசிகவுக்கு 2 தொகுதிகள் உள்ளன.

விசிக உயர்மட்டக் கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் உயர்மட்டக் கூட்டம் நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தமிழக அரசியலின் அடுத்தகட்டத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தரப்பு கோரிய வடிவத்தில் ஆதரவுக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வராக முடியாமல் தவிக்கும் விஜய்

தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. விசிகவின் ஆதரவு உறுதியானால், 118 ஆதரவு உறுதியாகி, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் வாய்ப்பு உருவாகும்.

இன்று நடைபெறும் விசிக உயர்மட்டக் கூட்டத்தின் முடிவு தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எளிய மக்களும் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+