ரூ.1000 கோடி விஞ்ஞான ஊழல்.. அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்.. வீரலட்சுமி பகீர் புகார்!
சென்னை: சென்னை பெங்களூர் விரைவுச் சாலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதில் உடந்தை என்றும் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பகீர் குற்றச்சாட்டுக்களை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், "பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி மற்றும் எம்.ஜி.பாஸ்கர் இருவரும் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 600 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறையிடம் இரண்டு முறை புகார் அளித்தோம். ஆனால் 2 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பார்த்தால் இந்த விஷயத்தில் அவர்களுக்கு பக்க பலமாக அண்ணாமலை இருக்கிறார். மாலினி ஜெயச்சந்திரன், எம்.ஜி.பாஸ்கர் ஆகியோர் டம்மி பீஸ். அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதே அண்ணாமலை தான். இந்தப் பணத்தில் வரும் பங்கு அவருக்கும் செல்கிறது. எனவே இந்த விவகாரத்தில் மூன்றாவது முறையாக புகார் அளிக்க உள்ளோம். வரும் 26ஆம் தேதி அண்ணாமலை மீது வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளோம்.
இதில் ஏன் அண்ணாமலை பெயரையும் சேர்க்கிறோம் என்றால், சென்னை பெங்களூர் விரைவுச் சாலை திட்டத்தில் மாலினி மற்றும் பாஸ்கருடன் சேர்ந்து சுமார் 1000 கோடி ரூபாய்க்கு விஞ்ஞான ஊழல் செய்ய அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார். அதனை தமிழர் முன்னேற்றப்படை முறியடிக்கும். இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்காக ஆவணங்களை திரட்டி புகார் கொடுக்க உள்ளோம்.
முறைகேடுகளில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் எம்.ஜி.பாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்போம்" என வீரலட்சுமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும் இதில் அண்ணாமலையும் ஈடுபட்டுள்ளார் என்றும் வீரலட்சுமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி. வீரலட்சுமி கடந்த சில வாரங்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளிக்க வீரலட்சுமி உதவி வந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமியிடம் இருந்து பிரிந்து பெங்களூர் சென்றார். ஆனாலும், விடாமல் சீமானுடன் கருத்து மோதல் நடத்தி வந்த வீரலட்சுமி, இப்போது அண்ணாமலையை டார்கெட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications