"ஒரு நிலையாவே இருக்க மாட்டீங்களா?" ஆவேசமான வீரலட்சுமி.. சீமான் விவகாரத்தில் நடிகைக்கு சரமாரி கேள்வி
சென்னை: சீமான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதற்கிடையே இனி எந்தவொரு புகாரும் அளிக்கப்போவதில்லை எனக் கூறி பாலியல் புகார் அளித்த நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமானை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கும் அழைத்து விசாரித்தனர்.

சென்னை ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்தே போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதற்கிடையே போலீஸ் விசாரணைக்குத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் நேற்றைய தினம் உத்தரவிட்டது. இதைச் சீமானும் வரவேற்று இருந்தார்.
நடிகை வெளியிட்ட வீடியோ
இதற்கிடையே இன்று அந்த நடிகை மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், "நான் இனி எந்த புகாரும் தரப்போவது இல்லை. புகார் கொடுத்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டார்கள்" எனச் சொல்லி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
நிலையாக இருக்க மாட்டீர்களா
இது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே அந்த நடிகைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "சகோதரியே, நீங்கள் 2011ல் சீமான் மீது முதலில் பாலியல் புகார் அளித்தீர்கள். அந்த புகாரை அதிமுக அரசு ஏன் கிடப்பில் போட்டது என்பது குறித்து நான் எனக்கு இருக்கும் அதிமுக நட்பு வட்டாரத்தில் விசாரித்தேன்.
அந்த நடிகை நிலையாக இருக்க மாட்டார். எப்போது வேண்டுமானாலும் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என்பதாலேயே சீமானுக்கு அந்த அரசு ஆதரவாக நடந்து கொண்டது. கடந்த 2023ல் நீங்கள் மீண்டும் புகார் அளிக்க வந்தீர்கள். கமிஷ்னர் அலுவலகத்தில் நானும் வந்தேன், புகார் அளித்தோம்.
திடீரென வாபஸ் பெற்றீர்கள்
தமிழகத்தில் உள்ள பெண்களுக்குத் தான் தந்தை ஸ்தானம் எனச் சொல்லும் தமிழக முதல்வரும் போலீசாரை முடுக்கிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றார்கள். போலீசாரும் கடுமையான விசாரணை நடத்தினர். அது அனைவருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் திடீரென வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரை வாபஸ் பெற்றுவிட்டீர்கள்.
இப்போது மீண்டும் இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறீர்கள். உச்ச நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை.. எனக்கு ஆதரவாக இல்லாமல் என்னை வைத்து அரசியல் மட்டும் செய்வதாக வீடியோ போட்டுள்ளீர்கள். எனக்கு ஒரு வீடியோவை அனுப்பிவிட்டு நீங்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்குப் போய் புகாரைத் திரும்பப் பெற்றுவிட்டீர்கள். இரு நாட்களுக்கு முன்பு தான் நீங்கள் என்னைத் தொடர்பு கொண்டு, உங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தீர்கள். நீதி பெற்றுத் தர உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தீர்கள். நானும் சரி என உறுதியளித்தேன்.
போராட்டம் நடத்தவிருந்தேன்
தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்து வந்தேன். உங்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தேன். இப்போது திடீரென வந்து நான் எதற்கும் வர மாட்டேன் எனச் சொல்லி இருக்கிறீர்கள். சீமானுக்கும் எனக்கும் கருத்தியல் ரீதியாகவே பிரச்சினை இருந்தது. அதை நான் அரசியல் ரீதியாகப் பார்த்துக் கொண்டு இருப்பேன். உங்களுக்காகவே நான் சீமானை பகைத்துக் கொண்டேன். மற்றபடித் தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் பிரச்சினை இல்லை.
வருத்தம் தெரிவிக்கணும்
சும்மா ஒரு வீடியோ வெளியிட்டு உங்களுக்கான ஆதரவு குறித்து நீங்களே தவறாகப் பேசுகிறார்கள். இன்று நீங்கள் வெளியிட்ட வீடியோவுக்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் வெளிப்படையாகக் கேட்கலாமே.. அதை விட்டுவிட்டு யாரும் எதுவும் செய்யவில்லை எனச் சொல்லி உதவ வருவோரை உதாசீனப்படுத்தக்கூடாது.
இன்று நீங்கள் வெளியிட்ட வீடியோவுக்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் யாருமே உங்களுக்கு உதவ மாட்டார்கள்" என்று கூறியுள்ளார். அந்த நடிகையின் வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ இப்போது டிரெண்டாகி வருகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications