Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெட்ரோ அனுப்பிய கடிதம்.. தாம்பரம்-பள்ளிக்கரணை மெட்ரோ.. வேளச்சேரி மேம்பாலம் தள்ளிப்போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, வேளச்சேரி பிரதான சாலையில் கட்டப்படவிருந்த மேம்பாலத்தின் பணிகளை சென்னை மாநகராட்சி ஒத்திவைத்துள்ளது. தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரை, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, குருநானக் கல்லூரி மற்றும் ஃபைவ் ஃபர்லாங் சாலை வழியாகச் செல்லும் சென்னை மெட்ரோவின் திட்டமானது, மேம்பாலம் அமையவிருந்த இடத்தில் சுமார் 650 மீட்டர் நீளத்திற்கு வருவதாக தலைமைப் பொறியாளர் (பாலங்கள்) பி.சங்கரவேலன் கூறினார்.

சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளை அடைய, ரேடியல் சாலை, அண்ணாசாலை, கிண்டி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அடையாறு, மத்திய கைலாஸ், தரமணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக அதிகமாக வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை மூலம் புதிய பாலங்களை ஆங்காங்கே கட்டுவது வழக்கம்.

Velachery flyover work postponed Chennai Corporation decides on Metro station design

அந்த வகையில் கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலை மிகவும் குறுகியதாக இருக்கிறது.இதனால் எப்போதுமே அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. எனவே அங்கு குறைக்க 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.

இதற்கான டெண்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அதில் பாலம் கிண்டி கவர்னர் மாளிகை அருகே உள்ள சர்தார் பட்டேல் சாலையில் தொடங்கி குருநானக் கல்லூரி வரையில் 100 அடி சாலையில் முடியும் வரையில் கட்ட முடிவானது. இந்த பாலத்தின் திட்ட மதிப்பு ரூ.310 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, டெண்டர் பணிகள் முடிவடைந்துவிட்டது. விரைவில் பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. ஆனால் தற்காலிமாக பால் அமைக்கும் பணியினை நிறுத்தி வைக்கக்கோரி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை வழியாக வேளச்சேரிக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வழித்தடம் வேளச்சேரி 100 அடி சாலையில் குருநானக் கல்லூரி எதிரே ஐந்து பர்லாங் சாலை வழியாகவும் அமைய போகிறது. இதே வழியில் தான் மாநகராட்சி அமைக்கும் பாலமும் செல்கிறது. மெட்ரோ ரயில் வழித்தடம் உயர்மட்ட பாதையில் அமைய இருப்பதால் அதற்கேற்றார் போல் பாலத்தை வடிவமைக்க வேண்டி உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

எனவே, வேளச்சேரி புதிய பாலம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிந்தது. தாம்பரம் - வேளச்சேரி மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைய நீண்டகாலம் எடுக்கும் என்பதால் வரைபடம் தயாரித்து விரைவில் ஒப்படைக்க மாநகராட்சி தரப்பில் கேட்கப்பட்டிருககிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் பணிகளை முடித்து ஒப்படைத்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரியில் பாலப் பணிகளை தொடங்குவோம். இல்லையென்றால் தாமதமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, வேளச்சேரி பிரதான சாலையில் கட்டப்படவிருந்த மேம்பாலத்தின் பணிகளை சென்னை மாநகராட்சி ஒத்திவைத்துள்ளது. தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரை, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, குருநானக் கல்லூரி மற்றும் ஃபைவ் ஃபர்லாங் சாலை வழியாகச் செல்லும் சென்னை மெட்ரோவின் திட்டமானது, மேம்பாலம் அமையவிருந்த இடத்தில் சுமார் 650 மீட்டர் நீளத்திற்கு வருவதாக தலைமைப் பொறியாளர் (பாலங்கள்) பி.சங்கரவேலன் கூறினார்.

முதலில் மேம்பாலத்திற்கான அடித்தளம் மற்றும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவும், அதன் மேல் மெட்ரோவின் அமைப்பை அமைக்கும் வகையில் சென்னை மெட்ரோ தனது வடிவமைப்பைச் சமர்ப்பிக்கவும் சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது. உள் விவாதங்களுக்குப் பிறகு சென்னை மெட்ரோ பதிலளிக்கும், இந்த விவாதங்கள் டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் சங்கரவேலன் கூறினார். எந்த நிறுவனம் முதலில் பணியைத் தொடங்குகிறதோ, அதற்குத் தேவையான கூடுதல் நிதி கிடைக்கும். பணிகள் ஜனவரியில் தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+