கெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..!
சென்னை: ஆட்களைத் திரட்டி வந்து கெத்து காட்டும் "பண்டைய நாகரீகம்" இன்றும் அதிமுக ஆட்சியில் தொடருவது ஆச்சரியமாகவே உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக தனது தொகுதியில் இருந்து 2 பஸ்களில் ஆட்களை திரட்டி வந்து கெத்துக்காடிவிட்டார் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

ஒவ்வொரு அமைச்சரும் தனது துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் போது, தனக்கு நெருக்கமானவர்களை விவாதத்தை பார்வையிட அழைத்து வருவது வழக்கம். அந்த வகையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கடந்த வாரமே தொகுதி முழுவதும் நிர்வாகிகளுக்கு போன் போட்டு 15-ம் தேதி அவசியம் சென்னை வந்தாக வேண்டும் என உத்தரவு போட்டுவிட்டார்.
சில நிர்வாகிகள் கல்யாணம், காதுகுத்து இருக்கு என கூறியுள்ளார்கள். ஆனால் வெல்லமண்டி யாரையும் விடுவதாக இல்லை, செலவை பற்றி கவலைப்பட வேண்டாம் எனக் கூறி சொந்த செலவில் சொகுசு பேருந்துகளை பிடித்து சட்டப்பேரவை வளாகத்தில் ஆட்களை குவித்து விட்டார்.
மற்ற அமைச்சர்கள் யாரும் செய்யாத ஒன்றை இவர் செய்து பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். 15ம் தேதி பேரவை வளாகம் முழுவதும் வெல்லமண்டியின் புகழ்பாடிகள் தான் சுற்றித்திரிந்தனர்.
என்ன இருந்தாலும் கூட்டமாக ஊர்க்காரர்களைப் பார்த்தாலே ஒரு கெத்துதானே!
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications