1 சீட் கண்டிப்பா வேணும்.. கோதாவில் குதித்த வேல்முருகன்.. திமுகவுடன் நாளை பேச்சு.. கூட்டணியில் பரபர!
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக திமுக கூட்டணியில் 1 சீட் கேட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழ்நாட்டில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது திமுக.

திமுக கூட்டணியில் சீட் பங்கீடு: இதைத் தொடர்ந்து, மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 2 இடதுசாரி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தலா 2 தொகுதிகள் எவை எவை என்பது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.
திமுக கூட்டணியில் இணைவதற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்குள் வந்தால், அவர்கள் கோவை தொகுதியை கேட்டுப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, சிபிஐஎம் கட்சிக்கு இன்னும் எந்தெந்த தொகுதி என்பது உறுதி செய்யப்படவில்லை.
கோதாவில் குதித்த வேல்முருகன்: காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக, இந்த முறை பம்பரம் சின்னத்தில் தான் நிற்போம் என உறுதியாக இருந்து வருகிறது. மேலும் 2 லோக்சபா சீட் + 1 ராஜ்யசபா சீட்டும் கேட்டு வருகிறது. 2 என்றால் உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என திமுக தரப்பு வலியுறுத்த, மதிமுக அதை மறுக்க, இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் கோதாவில் குதித்துள்ளார். அவரும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாகவே, தங்கள் கட்சிக்கு 1 எம்.பி சீட் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, நாளை வந்து பேசுமாறு முதல்வர் ஸ்டாலின் வேல்முருகனிடம் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த வேல்முருகன்: தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கலைஞர் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சீட் கேட்டுள்ளோம்: அந்தவகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும், முதல்வரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "லோக்சபா தேர்தலில் திமுகவிடம் ஒரு சீட் கேட்டுள்ளோம். நாளை அழைத்துப் பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முடிவு திமுக தலைமையிடம் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 1 தொகுதியிலாவது களம் கண்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் வேல்முருகன்.
சீட் ஒதுக்கப்படுமா?: கடலூர் தொகுதியை திமுகவிடம் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறார் வேல்முருகன். இந்நிலையில் தான் நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் திமுக தரப்பு பேச உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு சீட் ஒதுக்கப்படுமா அல்லது, அக்கட்சி, சீட் பெறாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்குமா என்பது தெரியவரும்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு தொடருமா?: சில மாதங்களுக்கு முன்பு பேசிய வேல்முருகன், "கொங்குநாடு மக்கள் கட்சிக்கு கூட ஒரு எம்.பி சீட் தரும் போது கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை கட்டமைக்கப்பட்ட கிளைகளை கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஏன் ஒரு இடத்தை தரக்கூடாது என்பதுதான் எனது கேள்வி. திமுக கொடுக்கவில்லை என்றால் ஜனநாயக சக்திகளோடு பயணித்து பாசிச பாஜகவை வீட்டு அனுப்ப பயணிப்பதா அல்லது வேறு கூட்டணியில் செல்வதா என்பதை செயற்குழு கூட்டி தீர்மானிப்போம்." என வேல்முருகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. எனவே, இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும்பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்றும் வேல்முருகன் தெரிவித்திருந்தார்.
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications