டோல்கேட் மூலம் எவ்வளவு வருமானம்? வெள்ளை அறிக்கை வேண்டும்! வேல்முருகன் கிடுக்கிப்பிடி!
சென்னை: சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ரூ.100 கோடி கட்டணம்
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

28 சுங்கச்சாவடிகளில்
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 என இரண்டு கட்டங்களாக சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கண்டனத்துக்குரியது
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு, தற்போது சுங்க கட்டணத்தை மேலும் உயர்த்த இருப்பது கண்டனத்துக்குரியது.

நிதி நெருக்கடி
தற்போதைய சுங்கக் கட்டண உயர்வால் ஏற்கனவே நிதி நெருக் கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கும், கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.

பகற்கொள்ளை
இது ஒருபுறமிருக்க, சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளை தான். ஒப்பந்த நிறுவனங்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலே இலாபத்துடன் திரும்ப எடுத்துவிட்ட பிறகும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி
எனவே, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

வெள்ளை அறிக்கை
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் அன்றாடம் வசூலிக்கப்படும் உபயோகிப்பாளர் வாகனக் கட்டண விபரம், சுங்கச் சாவடிகளில் தினசரி கடந்து செல்லும் மொத்த வாகன விபரங்கள் மற்றும் சாலை மற்றும் சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விபரங்களை, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஒன்றய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
-
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications