தமிழகத்திற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு உள் அனுமதி சீட்டு நடைமுறை தேவை -வேல்முருகன்
சென்னை: தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளி மாநிலத்தவர்களை அதிகளவில் தமிழகத்தில் குடியேற அனுமதித்தால், தமிழர்கள் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையாய் ஆகிவிடுவார்கள் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே, 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் அலை அலையாக வந்திறங்குகின்றனர். உடல் உழைப்புப் பணிகளிலும் இவர்கள் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, மண்ணின் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகின்றது.

எச்சரிக்கை
தொழில் - வணிகம் ஆகியவற்றிலும் வெளி மாநிலத்தவரே ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான நிலை உள்ளது. இப்போக்கு, தமிழர்களின் வேலை, தொழில், வணிகம், பண்பாடு உள்ளிட்ட வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மொழியினத் தாயகமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சீர்குலைக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

தார் பூசி அழிப்பு
இச்சூழலில் தான், அசாம் மாநிலத்தின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில் மிகை எண்ணிக்கையில் குடியேறிய வங்காளிகள், அப்பகுதியை தங்களுக்கே உரிய தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கின்றனர். அப்பகுதியின் அலுவல் மொழியாக தங்கள் தாய்மொழியான வங்காளியை ஆக்கிவிட்டார்கள். அப்பகுதியில் அறிவிப்பு பலகைகளில் இருந்த அசாம் மொழி சொற்களை தார் பூசி அழித்துள்ளனர் வங்காளிகள்.

அசாமிடம் பாடம்
அசாமிடம் இருந்து தமிழ்நாடு பாடம் கற்கவில்லை என்றால், தமிழர்கள் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையாய் ஆகிவிடுவார்கள். அதோடு, தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கக் கூடிய இடத்திற்கு வடமாநிலத்தவர்கள் வந்து விடுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டு கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு தான் வடமாநிலத்தவர்கள் வாக்களிப்பார்கள்.

தாக்குதல் நிகழ்வு
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவையில் குடியேறிய வடமாநிலத்தவர்கள், மோடிக்கு வாக்கு அளிக்கக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டது நமக்கு நினைவிருக்கும். மேலும், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications