செவிலியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது! இது சரியல்ல! அரசுக்கு அறிவுறுத்தும் வேல்முருகன்!
சென்னை: செவிலியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா நான்காவது அலை ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும், செவிலியர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் நான்காவது அலை சீனா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமடைந்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்தியாவில் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்று கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்டக் கூடாது என உலக நல நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4-வது அலை
கொரோனா நான்காவது அலை ஏற்பட்டாலும் , அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு தனது மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும், செவிலியர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், அதற்கு மாறாக தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை, மருத்துவர்களை, செவிலியர்களைப் பணி நீக்கம் செய்வது சரியல்ல.

500 செவிலியர்கள்
முக்கியமாக, கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் 3 ஆயிரம் பேரில், 2,500 பேருக்கு நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணிமாற்றம் செய்து பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள 500 செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதோடு, செவிலியர்கள் மத்தியில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேயம்
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இந்த செவிலியர்கள் தங்கள் உயிரையும் துச்சமென கருதி, அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவ சேவையாற்றினர். எனவே, 500 செவிலியர்களின் பணி சேவையை மதித்து, தற்போது பணிபுரிந்து வரும் பணியில் தொடர்ந்து சேவையாற்ற, மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்செவிலியர்களையும் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணி மாற்றம் செய்வது குறித்து தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications