வேல்முருகனுக்கு ஆவேசம்..அதெப்படி ஸ்டாலினை சொல்லலாம்? ஆளுநர் மாளிகை கிளம்புகிறார்..கொதிக்கும் காவிரி
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று செப்டம்பர் 30-ம் தேதி "காவிரி எங்கள் உரிமை" என்ற முழக்கத்துடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் போராட்டம் வெடித்து வருகிறது.. அதேபோல, தமிழகத்திலும் விவசாய அமைப்புகள் முதல்அரசியல் கட்சிகள் வரை ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
வேல்முருகன்: இன்றுகூட நாம் தமிழர் கட்சியானது, தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது.. அந்தவகையில், வாழ்வுரிமை கட்சியும் இன்றைய தினமே அதாவது செப்டம்பர் 30ம் தேதியே, தன்னுடைய போராட்டத்தையும் அறிவித்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் 2 நாட்களுக்கு முன்பே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துகொண்ட பாஜக மோடி அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை சரிந்து விடுமோ என்ற அச்சத்தில், ஒன்றியத்தில் வழக்கம் போல் வாய்மூடி மௌனம் காக்கிறது.
இளிச்சவாயர்கள்: காவிரி ஆணையத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பலனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு சட்டப்படி கர்நாடகம் தரவேண்டிய காவிரி பங்கு நீரை, மோடி அரசும் பெற்றுத்தர முடியவில்லை; இனிமே பெற்று தர போவதில்லை. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி; கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி. அவர்களை பொறுத்தவரை, தமிழர்கள் ஏமாளிகள்; இளிச்சவாயர்கள் என்பதே மன ஓட்டம்.
முதல்வர் ஸ்டாலின்: எனவே, காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும், செப்டம்பர் 30ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணியை முன்னெடுப்பதோடு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளது என்று அறிவித்திருந்தார்.
வேல்முருகனின் கட்சி இன்று நடத்தப்போகும் முற்றுகையானது, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications