ரிப்போர்ட்டர் மீது தாக்குதல்! காவல்துறையின் அலட்சியம் கண்டனத்திற்குரியது! கொந்தளிக்கும் வேல்முருகன்!
சென்னை: செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொலைவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
4 மணி நேரத்திற்கு முன்னதாகவே, பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை காவல்துறை அலட்சியமாக கையாண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என கொதித்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் செய்தியாளராக சகோதரர் நேசபிரபு பணியாற்றி வந்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானக்கடையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் பல்லடம் உணவகம் ஒன்றில் சிறப்பு பிரிவு காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சகோதரர் நேசபிரபு, நேற்று வழக்கம்போல் செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, நேசபிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது. வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
இந்நிகழ்விற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே, பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை காவல்துறை அலட்சியமாக கையாண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எனவே, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதோடு, எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர் நேச பிரபுக்கு உயர்தர மருத்துவச் சிகிக்சை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதே நேரத்தில், மெத்தனப்போக்குடன் செயல்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. மேலும், நேச பிரபுக்கு பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேச பிரபு விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலை கூறிக்கொள்கிறேன்.''
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications