தமிழக வேளாண் பட்ஜெட்டில் 3 ஏமாற்றங்கள்! மற்றபடி குறையில்லை! வேல்முருகன் பளிச்!
சென்னை: வேளாண் பட்ஜெட்டில் வரவேற்கத் தக்க அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் 3 விவகாரங்களில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வேளாண் நிதிநிலையில் இருக்கும் ஒரு சில குறைபாடுகளை களைய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

மண்வளத்தை பேணிக்காக்க, 'முதல்- அமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளை ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டில் காலநிலை அம்மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கதக்கது.
வேளாண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு, முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி ஒதுக்கீடு, விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் உள்ளிட்ட அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு, கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி இலக்கு, வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகளும் பாராட்டுக்குரியது.
ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து, மண்ணின் வளம் காக்க 6.27 கோடி நிதி ஒதுக்கீடு, இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு 10 லட்சம் ஏக்கரில் பயிர் இடுவதற்காக 5 லட்சம் லிட்டர் உயிர் உரங்களுக்காக ரூ. 7.50 கோடி நிதி ஒதுக்கீடு,இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு, 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் உள்ளிட்ட அறிவிப்புகள், மண்ணின் வளத்தை பாதுக்கும் என்பதில் ஐயமில்லை.
மனித சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக நீரிழிவு நோய் விளங்கி வரும் சூழலில், அந்நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படுவது முக்கிய அம்சமாகும்.
பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டு மையம் ரூ.16.3 கோடியில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் வாயிலாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக, நிலம் கையகப்படுத்தப்படாது என்ற அறிவிப்பு இல்லாததும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. அதே போன்று, பண்ருட்டியில் முந்திரி, பலா உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், வேளாண் கல்லூரி அமைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.
விவசாயிகள் சுமார் 100 லட்சம் டன் உணவு தானியங்களை சாகுபடி செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 45 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையை மாற்ற நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஆனால், அதற்கான திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது உழவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, வேளாண் நிதிநிலையில் இருக்கும் ஒரு சில குறைபாடுகளை களைந்து, மண்ணின் வளத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications