மாணவியை பெட்ரோல் ஊற்றி கொலை... மிருகச்செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -வேல்முருகன்
சென்னை: விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மிருகச்செயலில் ஈடுபட்ட முருகன், கலியபெருமாள் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தப்பிவிடாமல் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பெட்ரோல் ஊற்றி
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர்; அதன் அருகேயுள்ள திருமதுரை கிராமத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவா். அவர் தன் வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். 95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அவர், அப்பகுதியினரால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். பின்னா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணை
இந்தக் கோர சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த இருவா், முருகன் மற்றும் கலியபெருமாள், தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்தார். அந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

முன் பகை
இந்நிலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட அந்த பத்தாம் வகுப்பு மாணவி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.
மாணவியின் குடும்பத்தாரோடு இருந்த முன்விரோதம் காரணமாகவே மாணவி கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாணவியின் தந்தைக்கும் முருகன் தரப்புக்கும் முன்பகை இருந்துள்ளது. மாணவியின் சித்தப்பா, முருகன் தரப்பால் ஏற்கனவே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கும் நடந்துவருகிறது.

மிருகச் செயல்
இந்தப் படுகொலையைச் செய்திட, கொரோனா ஊரடங்கு சமயத்தைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல; இந்தக் கொலைகாரர்கள் ஆளும் அதிமுகவின் அப்பகுதி நிர்வாகிகள் என்பதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். ஆளுங்கட்சி அதிகார மமதையே இந்தக் கொலைக்கு அடிப்படைக் காரணம் என்று சொல்ல முடியும். எனவே இந்த மிருகச்செயலில் ஈடுபட்ட முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications