பரந்தூர் விமான நிலையம்! தமிழக அரசுக்கு தலைகுனிவும் -அவப்பெயரும் ஏற்படும்! எச்சரிக்கும் வேல்முருகன்!
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசின் அனுமதி முடிவு அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முடிவு மக்கள் மத்தியில், தமிழ்நாடு அரசுக்கு தலைகுனிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராடியும், கோரிக்கை விடுத்தும் வருகின்றன.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசாணையில் 20 கிராமங்களில் 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலம் எடுப்பு பணிக்காக 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி 43ல், விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த அதிமுக ஆட்சியில் மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவுத் திட்டங்களைத் தொடர்ந்து மக்கள் எதிர்த்து வந்தபோது, மக்களோடு நின்ற திமுக அரசு, தற்போது அதற்கு நேர்மறையாக நிற்பது என்பது பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதியை மீறுகின்ற செயலாகும் இது மக்கள் மத்தியில், தமிழ்நாடு அரசுக்கு தலைகுனிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டின் நலன் என்ற பெயரிலும், வளர்ச்சி என்ற பெயரிலும் பாசிச மோடி அரசு திணித்த நாசக்கார திட்டங்களை நடைமுறைப்படுத்த எடப்பாடி அரசு முயன்றதாலேயே, கடந்த 2021 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டினர். தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்து, திமுக அரசும் அதே தவறை செய்து விடக்கூடாது.
எனவே, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். தங்களின் நிலங்களைத் தர மறுத்து, பரந்தூர் புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களைக் கைது செய்யும் போக்கினை தமிழ்நாடு அரசு நிறுத்துவதோடு, அம்மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications