வேங்கை வயல் சம்பவம்.. உண்மை வெளி வரக் காரணமானவர்களை குற்றவாளிகளாக்க முயற்சி! குமுறிய பா.மோகன்!
சென்னை: வேங்கை வயல் சம்பவத்தில் முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் குடிநீரில் மலத்தை கலந்ததாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், வேங்கை வயல் சம்பவம் வெளிவருவதற்கு காரணமாக இருந்தவர்களையே குற்றவாளிகள் ஆக்க காவல்துறை முயற்சிப்பதாக கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வழக்கறிஞர் பா.ப.மோகன் குற்றம் சாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் , சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
மேலும், சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக முயல்வதா என விசிக தலைவர் திருமாவளவன் , இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் வேங்கை வயல் சம்பவம் வெளிவருவதற்கு காரணமாக இருந்தவர்களையே குற்றவாளிகள் ஆக்க காவல்துறை முயற்சிப்பதாக கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வழக்கறிஞர் பா.ப.மோகன் குற்றம் சாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் போலீசாரின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது என கூறுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து இருந்த மோகன்," வேங்கை வயல் சம்பவத்தில் தண்ணீரில் மலம் கலந்து அதனை குடித்த கோபிகா ஸ்ரீ என்ற மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவில் அதில் மலம் கலக்கப்பட்டு இருக்கிறது. அது கன்டாமினேட் வாட்டர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால், பிடிஓ, தாசில்தார், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சேர்ந்து மிக முக்கியமான ஆதாரமான அந்த தண்ணீரை சோதனைக்கு உட்படுத்தாமல் அதனை அகற்றி இருக்கிறார்கள். அந்த தண்ணீரை தடயவியல் சோதனைக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தாசில்தார், பிடிஓ, ஊராட்சி தலைவர் உட்பட அந்த தண்ணீரை அகற்றியது தான் வழக்கை முறையாக புலன் விசாரணை செய்யவில்லை என்பதை காட்டுகிறது. அதை செய்திருந்தால் அன்றைக்கே தெரிந்திருக்கும் இதற்கெல்லாம் காரணம் என்னவென்று.
முனி ராஜா என்று சொல்லக்கூடிய ஒரு காவலர், இந்த நிகழ்வை தொலைக்காட்சிகளுக்கும் மற்ற ஊடகங்களுக்கும் பரப்பியவர் சுதர்சன் என்பவர். இந்த இரண்டு பேருக்கும் கிரிமினல் பிரசிடிங் கோட் 41 ஏ-ன் படி அவருக்கு சமன் சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் இந்த வழக்கு யார் புகார் கொடுப்பதற்கு காரணமாக இருந்தார்களோ அவர்களையே குற்றம் சாட்டப்பட்டவர்களாக காட்டுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது.
முனிராஜாவையும் சுதர்சனையும் விசாரணை நடத்தும் காவலர்கள், இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள் உங்களுக்கு உரிய முறையில் உதவி செய்கிறோம் என்று சொல்லி அவர்களை கேட்டிருப்பது தான் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கின் வேராக இருக்கக்கூடிய ஆதாரத்தை அழித்துவிட்டு செடி கொடிகளை தேடுவது எப்படி நியாயம்? அப்படி செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என பேசி உள்ளார். கடந்தாண்டு அவர் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications