வேங்கைவயல்.. குற்றவாளியை நெருங்கும் சிபிசிஐடி? இன்று 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை!
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இன்று நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அப்பொழுதும் குற்றவாளிகளை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.
டிஎன்ஏ மாதிரிகள், மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தத் திட்டமிட்டு அதற்கான அனுமதிக்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து 3 பேருக்குக் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அதன்படி, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 1 காவலர் உள்ளிட்ட இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்தபோது வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications