வெங்காரம் சாப்பிட்டு மதுரை மாணவி பலி.. Miss Guide செய்த கிளினிக்கிற்கே கால் செய்த "ஒன்இந்தியாதமிழ்"
சென்னை: உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெங்காரம் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு மற்றும் ரத்த வாந்தி எடுத்து மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியின் உயிர் பறிபோக காரணமான யூடியூப் சேனலுக்கு ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
மதுரையைச் சேர்ந்த செல்லூர் மீனாம்பாள் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் - விஜயலட்சுமி தம்பதியின் மகளான கலையரசி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உடல் எடை அதிகமாக இருப்பதாகவும் அதனை குறைக்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்த கலையரசி, "இணைவோம் இயற்கையுடன்" என்ற யூடியூப் சேனலில் உடல் எடையை குறைப்பது தொடர்பான வீடியோவை பார்த்துள்ளார்.

அதில் கூறியபடி வெங்காரத்தை சாப்பிட்டுள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மருத்துவ ஆலோசனை எதுவும் பெறாமல் கண்மூடித்தனமாக யூடியூப்பை நம்பியதால் கல்லூரி மாணவியின் உயிர் பரிதாபமாக போயுள்ளது.
கல்லூரி மாணவியின் உயிர் பறிபோக காரணமான யூடியூப் சேனலுக்கு ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அந்த சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலைச் சேர்ந்தவர் கொஞ்சமும் பொறுப்பு இன்றி பேசினார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் கால் செய்த வீடியோவை இதில் பாருங்கள்..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications