குடையுடன் வெளியே போங்க - தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

இந்நிலையில், ஆந்திர கடலோர பகுதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 9-ந் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை: ஆந்திர கடலோர பகுதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. தென்மேற்கு பருவமழை முடிந்த பிறகும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Very haavy rian likely in Tamil Nadu today - India Meteorological department

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டு, வரும் 20-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்கு பருகாலம் என கணக்கிடப்படுகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல், தமிழகத்திலும், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திர கடலோர பகுதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று மி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 9-ந் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+