இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஓரளவுக்கு வெப்பம் தணிந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. கும்பகோணத்தில் பரவலாக நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.

கொட்டித் தீர்த்த மழை
வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கனமழையால் மகிழ்ச்சி
நாகை மாவட்டத்திலும் பரவலாக கன மழை பெய்தது. நாகூர், கீழ்வேளூர், தேவூர் சிக்கல், திருக்குவளை, சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெப்பம் தணிந்தது
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 4ம் நாளாக இடியுடன் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மிக கனமழை பெய்யும்
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமானது வரை
சென்னையை பொறுத்தவரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications