Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வதந்தி பரப்பாதீங்க ப்ளீஸ்.. நல்லகண்ணு உடல்நலம் குறித்து பரவும் வதந்தி! அவசர அவசரமாக வெளியான வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த அரசியல் தலைவர் ஆர். நல்லகண்ணு உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. அவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிதீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை குறித்து பரவும் தகவல்களை நம்ப வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லகண்ணு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 101 வயதை கடந்த அவர் கடந்த சில வாரங்களாக வயதுசார்ந்த உடல்நல பிரச்சனைகளால் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் சிறப்பு மருத்துவர் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கிறார். பிப்ரவரி 24 ஆம் தேதி அவரது உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வேகமாக பரவத் தொடங்கின.

Nallakannu cpi tamilnadu

நல்லகண்ணு உடல்நிலை

குறிப்பாக அவர் உயிரிழந்ததாக கூறிய பதிவுகள் பரவியதால் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் அந்த தகவல்கள் உண்மையல்ல என்று கட்சி விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் வெளியிட்ட வீடியோவில், நல்லகண்ணு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை

மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் அவர் இன்னும் ஆபத்து நிலையை முழுமையாக தாண்டவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக நீதி, விவசாயிகள் உரிமை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக நீண்ட காலம் போராடியவர் நல்லகண்ணு. எளிமையான வாழ்க்கை முறையாலும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருந்த அரசியல் தலைவராகவும் அவர் அறியப்படுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அவரது உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துவருகின்றனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்ற வாழ்த்துகளும் பல தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. தவறான தகவல்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதால் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர வேண்டாம் என்று கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ மருத்துவ அறிவிப்புகள் மற்றும் கட்சி வெளியிடும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உடல்நலம் வதந்தி

நல்லகண்ணு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதே தற்போதைய நிலை என்று கட்சி தெளிவாக அறிவித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல் படி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தற்போது அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கும் நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை தொடர்பாக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+